கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?

கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலையம் அருகாமையில் உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, அதில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, அவரது வீடு அருகே வசித்து வரும் பதினோராம் வகுப்பு படித்து வரும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், மாணவியின் தாய் கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்தார்.

கைதான இளவரசன்

இந்தப் புகார் அடிப்படையில், நேற்று (ஜனவரி 17) மாலை, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இன்று (ஜனவரி 18) அதிகாலை வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளவரசனைக் கைது செய்தனர். காவலர் ஒருவர் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.