Ira Jadhav: அன்று ஏலத்தில் பெயரில்லை; இன்று 157 பந்துகளில் 346* ரன்கள்; பதில்சொன்ன 14 வயது இரா ஜாதவ்
இந்திய உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிசிசிஐ-யால் வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில், 14 வயது மும்பை வீராங்கனை இரா ஜாதவ் முச்சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார்.
பெங்களூரிலுள்ள ஆலூர் கிரிக்கெட் மைதானத்தில் மும்பை மற்றும் மேகாலயா அணிக்கு இடையே, 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்போட்டியில், மும்பை அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய 14 வயது இரா ஜாதவ், 157 பந்துகளில் 42 ஃபோர்கள் மற்றும் 16 சிக்ஸர்கள் உட்பட 346 ரன்கள் குவித்து 50 ஓவர்களும் நாட் அவுட் வீராங்கனையாகக் களத்தில் நின்றார்.
மும்பை அணி மொத்தமாக 50 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 563 என்ற ஸ்கோரை எட்டியது. இது அனைத்து வயது பிரிவைச் சேர்ந்த இந்திய பெண்கள் உள்நாட்டு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்து களமிறங்கிய மேகாலயா அணி 19 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிசிசிஐ-யால் வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் (இருபாலர்) முச்சதம் அடித்து சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் இரா ஜாதவ்.
மேலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்திருந்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையையும் (224 ரன்கள்) இரா ஜாதவ் முறியடித்துள்ளார். இத்தகைய சாதனைக்குப் பின்னர் பேசுகையில், மும்பை வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான் தனது ரோல் மாடல் என கூறிய ஜாதவ், ``சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் சிறுவர் மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டு விளையாடிய கலப்பு அணியில் என்னுடைய முதல் சதத்தை அடித்தேன்.
3⃣4⃣6⃣* runs
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2025
1⃣5⃣7⃣ balls
1⃣6⃣ sixes
4⃣2⃣ fours
Watch snippets of Mumbai batter Ira Jadhavs record-breaking knock vs Meghalaya in Womens Under 19 One Day Trophy at Alur Cricket Stadium in Bangalore @IDFCFIRSTBank | @MumbaiCricAssoc
Scorecard ▶️ https://t.co/SaSzQW7IuT pic.twitter.com/tWgjhuB44X
அது என்னால் நன்றாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாட வேண்டும்." என்று தனது கனவைப் பகிர்ந்தார்.
தனது எட்டு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் இரா ஜாதவின் பெயர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 சீசனுக்கான ஏலத்தில் அடிப்படை விலை ரூ.10 லட்சத்துக்குக்கூட யாரும் இவரை ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/Neerathikaaram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


