Car Guide: புது கார் வாங்கப் போறீங்களா? 2025-ல் வரப்போகும் கார்கள் இதோ
அடுத்த வாரம் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ டெல்லியில் ஜரூராக நடைபெறப் போகிறது. இங்கே பெரும்பாலும் கான்செப்ட் வாகனங்களைத்தான் காட்சிப்படுத்துவார்கள்.
ஆனால், இந்த கான்செப்ட் வாகனங்கள் எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பு மாடலாகி, சாலையில் ஓட ஆரம்பிக்கலாம். அதற்கு முன்பு நம் சிறுமூளைக்கு எட்டியவரை சில கார்கள் இந்த 2025-ல் ரிலீஸாகலாம் என்று தெரிகிறது. அவை என்னனு பார்க்கலாம்! அதனால் புது கார்கள் வாங்கப் போறீங்கன்னா, கொஞ்சம் காத்திருங்க!
ஸ்கோடா கைலாக்
ரிலீஸ்: ஜனவரி கடைசி
விலை: சுமார் 10 லட்சம்
கைலாக் என்பது ஸ்கோடாவில் இருந்து ஓடக் காத்திருக்கும் சப் 4 மீட்டர், அதாவது காம்பேக்ட் எஸ்யூவி. இது இப்போதே தயாராக இருக்கிறது. கைலாக்கை புக் செய்யும் முதல் 33,333 வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா ஒரு பெரிய ஆஃபர் அறிவிக்கப்போகிறது. 6 காற்றுப்பைகள், 25 வகையான பாதுகாப்பு வசதிகள் என்று கிண்ணென்ற MQB-A0-IN ப்ளாட்ஃபார்மில் வரப் போகிறது கைலாக். 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்று வருகிறது கைலாக். பொதுவாக, ஸ்கோடா என்றாலே விலை பயமுறுத்தும். கைலாக் அப்படி இருக்காது.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் (Enyaq EV)
விலை: ரூ.50 - 60 லட்சம்
ரிலீஸ்: 2025 கடைசியில்
ஸ்கோடாவில் இருந்து முதல் எலெக்ட்ரிக் கார் வந்தால், அது என்யாக் (Enyaq EV) ஆகத்தான் இருக்கும். Ev - iV இரண்டுமே கொஞ்சமே குழப்பும். ஐவியோ, இவியோ - எப்படியும் இது எலெக்ட்ரிக் கார்தான். ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MEB எனும் Born - Electric ப்ளாட்ஃபார்மில்தான் என்யாக் உருவாகப் போகிறது. குளோபலாக, இந்த செக் குடியரசு நிறுவனத்தைச் சேர்ந்த என்யாக் பல்வேறுவிதமான பவர்ட்ரெயின்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. பேட்டரி ஆப்ஷன்களிலும்தான். என்யாக் எலெக்ட்ரிக் இப்போது தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடலாகக் கொண்டு வரப் போகிறது ஸ்கோடா. என்யாக் iV-ல் 80x என்றொரு டாப் ரேஞ்ச் மாடல் வரலாம். இதில் 77kWh பேட்டரி பேக் கொடுக்கிறார்கள். இதன் ரேஞ்ச் சிங்கிள் சார்ஜுக்கு எப்படியும் 500 கிமீ-யைத் தாண்டும். டூயல் மோட்டார்கள் உண்டு. ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் ஒவ்வொரு மோட்டார் என்பதால், இது AWD ஆகவும் வரப் போகிறது. என்யாக், 125kW DC அதிவேக சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்யும்படி இதன் பேட்டரி பேக் ரெடியாகப் போகிறது. 4.6 மீட்டர் நீளத்தில் இருந்தாலும், இது நிச்சயமாக 2 வரிசை க்ராஸ்ஓவர் கார்தான். விலை சுமாராக 50 - 60 லட்சம் இருக்கலாம்.

மாருதி சுஸூகி செலெரியோ டூர் H2 Taxi
விலை: சுமார் 5 - 6 லட்சம்
ரிலீஸ்: மே 2025
நீங்கள் டாக்ஸி வாங்கப் போகிறீர்கள் என்றால், செலெரியோவுக்காகக் காத்திருக்கலாம். ப்ரீமியம் வகையில் சியாஸ், எர்டிகா என்று கலக்கி வந்தாலும் டிசையருக்குப் பிறகு ஹேட்ச்பேக்கில் தனது செலெரியோ மாடலில் டூர் வேரியன்ட்டை இந்த ஆண்டு மாருதி கொண்டு வரலாம். வாடகை கார் ஓட்டுபவர்கள் நல்ல பராமரிப்பு அம்சம் கொண்ட காராக எதிர்பார்ப்பார்கள். மாருதிதான் அதற்கு பெஸ்ட் சாய்ஸ். இதை அநேகமாக 5 - 6 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் மாருதி கொண்டு வரலாம். டிசையரைப் போலவே இதிலும் Tour H2 என்கிற வேரியன்ட் மட்டும்தான் வரும். அதிக வசதிகளை எதிர்பார்க்க முடியாது. கொஞ்சம் பொறுத்திருங்கள்.
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஹைபிரிட்
விலை: ரூ. 7 - 8 லட்சம்
ரிலீஸ்: செப்டம்பர் 2025
ஸ்விஃப்ட் ஏற்கெனவே நல்ல மைலேஜ் தரும் ஓர் அற்புதமான ஹேட்ச்பேக். இதில் ஹைபிரிட்டையும் கொண்டு வரும் திட்டத்தில் மாருதி இருப்பதாகத் தகவல். ஹைபிரிட்டைத் தாண்டி, இதில் செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளாக சில அம்சங்களைச் சேர்க்கப் போகிறார்களாம். அதில் வென்ட்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங்கை எதிர்பார்க்கலாமா மாருதி?
மாருதி சுஸூகி e-கிராண்ட் விட்டாரா
விலை: ரூ. 20- 25 லட்சம்
ரிலீஸ்: மார்ச் 2025
ஆட்டோ எக்ஸ்போவில் ஏற்கெனவே eVX எனும் கான்செப்ட் காரைக் காட்சிப்படுத்தி இருந்தது மாருதி சுஸூகி. அந்தக் காரின் புரொடக்ஷன் மாடல்தான் இந்த எலெக்ட்ரிக் கிராண்ட் விட்டாரா. 4.27 மீட்டர் நீளம்; 2.7 மீட்டர் வீல்பேஸ், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 19 மற்றும் 18 இன்ச் ஸ்டைலிஷான அலாய்வீல்கள் என்று கலக்குகிறது இ-கிராண்ட் விட்டாரா. எலெக்ட்ரிக் ஆச்சே! 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்கில் வரப் போகிறது இது. இந்தக் கார் சிங்கிள் சார்ஜுக்கு 400 கிமீ தரும் என்று க்ளெய்ம் செய்கிறது மாருதி. இந்த பவர் ட்ரெயினில் மோட்டாரையும் இன்வெர்ட்டரையும் இணைக்கும் E-Axle -யும் இருக்கும். இதில் AWD - ஆல்வீல் டிரைவ் என்றால் 144hp மற்றும் 174hp பவரும்…. RWD -அதாவது ரியர்வீல் டிரைவ் என்றால், 184hp பவரும் 300Nm டார்க்கும் கொண்டிருக்கும். நார்மல் கிராண்ட் விட்டாராவை விட இதன் வீல்பேஸ் 100 மிமீ அதிகமாக இருக்கும். சிவப்பு, சில்வர், புளூ, சிவப்பு, கிரே என்று பல கலர்களில் வருகிறது இ- கிராண்ட் விட்டாரா. தனது குஜராத் தொழிற்சாலையில் முழுவதும் இதை அசெம்பிள் செய்து, இ-விட்டாரா என்று நாமம் சூட்டக் காத்திருக்கிறது மாருதி. ஏப்ரல் மாதம் எலெக்ட்ரிக் கிராண்ட் விட்டாரா வரலாம்.

மாருதி சுஸூகி ஃப்யூச்சுரோ E
விலை: ரூ. 20 - 30 லட்சம்
ரிலீஸ்: அக்டோபர் 2025
இதையும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில்தான் காட்சிப்படுத்தியது மாருதி. இது வந்தால் மாருதியின் முதல் கூபே எஸ்யூவி கார் இதுதான். இது க்ரெட்டா, செல்ட்டோஸ், டைகூன் போன்ற மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறங்கும். இதில் மாருதியின் 1.5 லிட்டர் கொண்ட K15B பெட்ரோல் இன்ஜின் இருக்கலாம். Mission Green Million எனும் புதிய முயற்சியின் கீழ் இதை அறிமுகப்படுத்தி இருந்தது மாருதி. அதனால், இது பின்னால் எலெக்ட்ரிக்காகவும் வரலாம். மாருதியைப் பொருத்தவரை வேகன்-ஆர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் இந்த ஆண்டு வர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
எம்ஜி சைபர்ஸ்ட்டர்
விலை: 50 - 60 லட்சம்
ரிலீஸ்: மார்ச் 2025
எம்ஜி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காராக வரப் போகிறது இந்த சைபர்ஸ்ட்டர். JSW குழுமம் சார்பாக விற்பனையாகப் போகும் முதல் காரும் இதுவே! MG Select என்றொரு பிராண்ட் மூலம் இது விற்பனை செய்யப்படும். இந்தியா முழுக்க 12 எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் அமைக்கப் போகிறது JSW MG மோட்டார்ஸ். 2021-லேயே இது கான்செப்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டது. பிறக்கும்போதே எலெக்ட்ரிக்காக உருவாகும் Born-Electric எனும் ப்ளாட்ஃபார்மில்தான் இது ரெடியாகப் போகிறது. சட்டெனப் பார்த்தால், ஃபெராரியோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு இந்த ஸ்போர்ட்ஸ் காரைப் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறது எம்ஜி. 4.53 மீட்டர் நீளத்தில், 1.91 மீட்டர் அகலத்தில், 1.32 மீட்டர் உயரத்தில் வரப் போகிறது இது. வீல்பேஸ் தாராளமாக இருக்கிறது; 2,689 மிமீ. இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் 64kWh பேட்டரி பேக் கொடுக்கப் போகிறார்கள். இதன் ரேஞ்ச் 520 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது எம்ஜி. இதிலேயே 77kWh கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி மாடலும் வரும். இதன் ரேஞ்ச் 580 கிமீ. வழக்கம்போல் இதில் டூயல் மோட்டார்கள் இணைந்து 544hp பவரையும் 725Nm டார்க்கையும் கொடுக்கும். CBU வழியில், அதாவது முழு இறக்குமதி காராக இது விற்பனையாகப் போகிறது. அதனால், இதன் விலை கொஞ்சம் தாறுமாறாகவே இருக்கலாம். நம்முடைய எதிர்பார்ப்பு 50 - 60 லட்சம். கியா EV6, BYD சீல், ஹூண்டாய் அயனிக் என்று சில கார்கள் இதற்குப் போட்டியாக இருக்கின்றன.

டாடா ஹேரியர் Ev
ரிலீஸ்: 2025 நடுவில்
விலை: ரூ.20 - 25 லட்சம்
2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் ஹேரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனைக் காட்சிப்படுத்தி இருந்தது டாடா. இப்போது லேட்டஸ்ட்டாக இத்தாலியின் EICMA ஆட்டோ ஷோவில். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஹேரியரைப் பற்றி ஏதாவது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக, ஹேரியரில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் வரப்போவதாகத் தகவல். இனி வரப்போகும் டாடாவின் எஸ்யூவிகள் அனைத்துமே AED/4X4 வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் வருமாம். இதற்கு முன்பே கர்வ் காரில் ATLAS (Adaptive Tech Forward Lifestyle Architecture) ப்ளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். இதுவும் ஆல்வீல் டிரைவ்தான். சில மாறுதல்கள் இருக்கும். இந்த ஹேரியர் எலெக்ட்ரிக், டாடாவின் புத்தம் புதிய acti.ev architecture எனும் தொழில்நுட்பத்தின் கீழ் ரெடியாகப் போகிறது. பேட்டரியைப் பொருத்தவரை 60kWh பேட்டரி பேக் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சார்ஜுக்கு 500 கிமீ க்ளெய்ம் செய்யலாம் டாடா. இதிலும் ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் ஒவ்வொரு மோட்டார் என டூயல் எலெக்ட்ரிக் மோட்டார். டீசல் இன்ஜின் கொண்ட ஹேரியரைப் போலவே வெளித்தோற்றம் மற்றும் உள்ளலங்காரங்களை எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக்குக்குத் தேவையான சில மாற்றங்கள் மட்டும் இருக்கும். வழக்கம்போல் டாடாவின் ஃபேவரைட்டான V2V (Vehicle to Vehicle), V2L (Vehicle to Load) போன்ற சார்ஜிங் ஆப்ஷன்களும் ஹேரியர் எலெக்ட்ரிக்கில் இருக்கும். கிண்ணென்ற 5 ஸ்டார் ரேட்டிங் எஸ்யூவியாக சுமார் 25 - 30 லட்சத்துக்குள் வரப் போகிறது ஹேரியர் எலெக்ட்ரிக்.

டாடா சஃபாரி எலெக்ட்ரிக்
விலை: ரூ.26 - 32 லட்சம்
ரிலீஸ்: NA
ஹேரியர் காரில் எலெக்ட்ரிக் இருந்தால், சஃபாரியில் வேண்டாமா? அதற்கும் திட்டம் இருக்கிறது டாடாவிடம். ஹேரியர் 5 சீட்டர் எஸ்யூவி. சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி. 7 சீட்டரில் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதே பரவசமாகத்தான் இருக்கிறது. அதுவும் டாடா போன்ற கிண்ணென்ற ப்ளாட்ஃபார்ம் கொண்ட நிறுவனங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கும்போது ஆர்வம் இன்னும் அதிகமாகிறது. இந்தியாவில் முதன் முதலில் பின் சீட்டுக்கும் வென்ட்டிலேட்டட் ஆப்ஷன் கொடுத்த டாடா, இந்த சஃபாரி எலெக்ட்ரிக்கிலும் பின் வரிசைக்கு வென்டிலேட்டட் சீட், ஒயர்லெஸ் சார்ஜிங், அடாஸ் போன்ற வசதிகள் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். ஹேரியர் எலெக்ட்ரிக்குக்கான ஸ்பை புகைப்படங்கள்கூட அங்கங்கே அடிபடுகின்றன. ஆனால், சஃபாரிக்கு… ப்ச்! அதற்கு முன்பு டாடாவின் 90’ஸ் ஃபேவரைட்டான சியரா வந்தாலும் வரும் என்கிறார்கள். இருந்தாலும் சஃபாரியின் வேலை நடந்து கொண்டிருப்பதாகத் தகவல். அதனால், ரிலீஸும் எப்போனு டாடாவுக்கே வெளிச்சம்!

எம்ஜி மிஃபா 9 (MG Mifa 9)
விலை: ரூ.65 லட்சம்
ரிலீஸ்: ஜூலை 2025
சைபர்ஸ்டர் காருக்குப் பிறகு, JSW குழுமத்தால் விற்பனை செய்யப்படப் போகும் 2-வது கார் இந்த மிஃபா 9. இது ஒரு எம்பிவி வகை வண்டி. டொயோட்டாவில் வெல்ஃபயர், கியாவில் கார்னிவல் இருக்கிறதல்லவா? அதைப்போன்றதொரு வேன் தோற்றத்தில் வரப் போகிறது இந்த மிஃபா. ஆனால், வெல்ஃபயர் ரேஞ்சுக்கு இதன் விலையை வைத்தால் எடுபடுமா தெரியாது என்பதால், இதை 65 லட்ச ரூபாய்க்கு பொசிஷன் செய்யலாம் கியா. மாதத்துக்கு 100 வெல்ஃபயர்களும், 3000 கார்னிவல் கார்களும் விற்பனையாகின்றன இந்தியாவில். மிஃபா அதைத் தாண்ட வேண்டும் என்று நினைக்கிறது எம்ஜி. ஏற்கெனவே 2021-ல் சீனா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் Maxus என்கிற பிராண்ட் பெயரில் Mifa 9 ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் எம்ஜி பிராண்டில் ஓடுகிறது மிஃபா 9. முதலில் எலெக்ட்ரிக் - அப்புறம் பெட்ரோல் மற்றும் டீசல் ஹைபிரிட்டாக G90 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது மிஃபா 9. நம் ஊரில் எம்ஜியின் டார்கெட் - முழு ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக்காகத்தான் இருக்கும். 90kWh பேட்டரி பேக் கொடுக்கலாம். இதன் ரேஞ்ச் 500 கிமீ-யைத் தாண்டும். 5.2 மீட்டர் நீளத்தில், பெரிய சொகுசு வேன் ரெடியாகி வருகிறது எம்ஜியிடம் இருந்து. ஜூலை மாதத்துக்கு மேல் சைபர்ஸ்டர் ரோட்ஸ்ட்டர் ரிலீஸுக்குப் பிறகு மிஃபா என்ட்ரி கொடுக்கலாம்.

டொயோட்டா பெல்ட்டா
விலை: 10 -15 லட்சம்
ரிலீஸ்: NA
‛சியாஸ்னு ஒரு கார் மாருதியில் ஓடுதே; அதோட ரீ-பேட்ஜ்டு டொயோட்டா வெர்ஷன் என்ன காரா இருக்கும்’ என்று பல வாசகர்கள் கேட்டதுண்டு. அதற்குப் பதில்தான் இந்த பெல்ட்டா. மத்திய கிழக்கு நாடுகளில் இந்த பெல்ட்டாவை நவம்பர் மாதம் 2021-லேயே ரிவீலிங் செய்துவிட்டது டொயோட்டா. பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக சியாஸ் போலவே இருக்க்கிறது பெல்ட்டா. 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல் ஸ்விட்ச்கள் என இதன் இன்டீரியரும் அப்படியே சியாஸ்தான். 105bhp பவர் மற்றும் 138Nm டார்க் தரும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் மற்ற நாடுகளில் ஓடுகிறது. இதுவும் நம் ஊர் சியாஸில் இருப்பதுவே! இந்த மாடல் மட்டும்தான் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. ‛யாரிஸ் காருக்கு மாற்றாக எப்போதோ, நம் ஊருக்கு இந்தா வரப் போகுது; அந்தா வரப் போகுது’ என்று படம் காட்டினார்கள். ஆனால் ஏற்றுமதிக்கு மட்டும்தான் பெல்ட்டா என்று டொயோட்டா தீவிரமாக இருப்பதாகத் தகவல். இந்த வருஷம் பெல்ட்டா வரலைன்னா கம்பெனி பொறுப்பில்லை மக்களே!
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக்
விலை: ரூ.17 - 21 லட்சம்
ரிலீஸ்: ஏப்ரல் 2025
க்ரெட்டாவின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த ஒரு வருஷமாக ஸ்பை ஷாட்டில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. தீவிர டெஸ்ட்டிங்கில் இருக்கும் க்ரெட்டா, எப்போது &
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


