TN Assembly : ``திட்டவட்டமாக மறுத்துவிட்டனர் - சட்டமன்றத்திலிருந்து வெளியாது குறித்து ஆளுநர் விளக்கம்!| Live
இதுதான் காரணம்! - சட்டமன்றத்திலிருந்து வெளியாது குறித்து ஆளுநர் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
ஆளுநர் ஆர்.என் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளியேறியாதற்காக காரணத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்." எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவை டேக் செய்திருக்கிறார்.
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க-வினர்
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது உள்ளிட்டக் கோரிக்கைகளுடன், சட்டையில் யார் அந்த சார் என்பதைக் குறிக்கும் பேட்ச் அணிந்து, அ.தி.மு.க-வினர் தொடந்து அமலியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிக் காக்கும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அவைக்காவலர்கள் மூலம் அ.தி.மு.க-வினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்தும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபாடு வருகின்றனர்.
ஆளுநர் இல்லாமல் தொடங்கிய சட்டமன்றம்!
ஆளுநர் புறப்பட்டு ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், ஆளுநர் ஆற்றவேண்டிய உரையின் தமிழாக்கத்தை சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
சபையில் நடந்தது என்ன?
சபை தொடங்கியதுமே வேல்முருகன் ஆளுநருக்கு எதிரான கோஷமிட்டார். தமிழ் தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் பேச தொடங்கிய சமயத்தில் அதிமுகவினர் அரசுக்கு எதிராகவும், வேல்முருகன் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆளுநரால் தனது உரையை தொடர முடியவில்லை. அதே நேரத்தில் ஆளுநர் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று சொல்லியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தனது உரையை நிகழ்தாமலே ஆளுநர் கிளம்பிவிடார்
வந்த வேகத்தில் திரும்பிய ஆளுநர்!
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என்றனர். இதனால் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான செல்பவப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழக ஆளுநர் சட்டப் பேரவைக்கு வந்தபோது, அவருக்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். தொடந்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லாதவராக, தொடர்ந்து எதிரான நிலையில் இருக்கிறார். மும்மொழி ஆதரவு, தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்." என்றார்.
யார் அந்த சார்?

தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படியே அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகையில், யார் அந்த சார்? என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் அவைக்கு வந்துள்ளனர்
2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 45 நிமிடங்கள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்த்து வாசிப்பார். ஆளுநர் உரை முடிந்த பிறகு, சமீபத்தில் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

அதற்கு அடுத்த நாள்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த கால ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த சிலப் பகுதிகளை புறக்கணித்து வாசித்திருந்தார். ஒரு சமயத்தில், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதெல்லாம் அப்போது அரசியல் அரங்கில் விவாதமானது. அதனால் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


