Kharge: ஜி.எஸ்.டி வரி மக்களின் சேமிப்பை குறைத்துள்ளது... - கார்கே கூறும் 7 பொருளாதார காரணிகள்!
இந்திய பொருளாதார நிலை குறித்து 7 காரணிகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
``மோடி அரசு, அது உருவாக்கியுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்ய எந்த தீர்வையும் கொண்டிருக்கவில்லை.
தங்கம் மீதான கடன்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தங்கம் மீதான கடன்களை வாங்கிக்கொண்டு, அதை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சாதாரண மக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகளின் மொத்த அளவு கடந்த 8 காலாண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு மக்களுக்கு இருந்த வாங்கும் சக்தியை, அதன் பிறகு மீண்டும் நாம் எட்டவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில், கடந்த ஆண்டு கார் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.
Modi Govt has NO solution for the Economic Turmoil it has created!
— Mallikarjun Kharge (@kharge) January 2, 2025
7 indicators that illustrate the extent of mess in the lives of ordinary Indians.
1⃣50% increase in Gold Loans and 30% jump in gold loan NPAs.
2⃣Private consumption - the total value of goods and services… pic.twitter.com/zhGxIQo7bJ
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019 - 2023), இன்ஜினீயரிங், உற்பத்தி, பிராசஸ், உள்கட்டமைப்பு துறைகளில் சம்பளம் கூட்டு வருடாந்திர விகிதமாக வெறும் 0.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 8 காலாண்டுகளில், உணவு பணவீக்கம் 7.1 சதவிகிதமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி மூலம் விதிக்கப்படும் மறைமுக வரியால், மக்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
வீடுகளில் ஆகும் செலவுகள் தற்போது 6.4 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் பெரிய உச்சம் ஆகும்.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் வெளிநாட்டு நிதிகள் இந்தியாவை விட்டு போகும் மற்றும் பல லட்சம் கோடி அளவுக்கு சிறு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
இந்த ஏழு காரணிகளும் சாதாரண இந்தியனின் வாழ்க்கை எப்படி கலைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.
நரேந்திரமோடி ஜி,
ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையை அழிப்பது தவிர, உங்களது புத்தாண்டு ரெசல்யூசன் வேறாக இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


