Tejasvi Surya: எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு கல்யாணம் - மணமகளாகும் பொன்னியின் செல்வன் பாடகி!

கர்நாடகாவின் இளம் எம்.பி-களில் ஒருவர் தேஜஸ்வி சூர்யா. பா.ஜ.க பின்னணியில் தீவிரமாக செயல்பட்டுவரும் இவர், பெங்களூரின் தெற்கு மக்களைவைத் தொகுதியிலிருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதாக தகவல் வெளியானது. சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக இசை கலைஞருமான சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் என்பவர்தான் மணமகள் என்றத் தகவலும் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் தொடர்பான தகவல்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது.

சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத்

சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸுடன் ஒரு யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன்- பாகம் 2-ன் கன்னடப் பதிப்பிற்குக் குரல் கொடுத்ததன் மூலம் கர்நாடகாவில் பிரபலமடைந்த இவர், சைக்கிள், மலையேற்றம் பொழுதுபோக்குகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் இருவரின் குடும்பத்தினரும் சந்தித்து திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமணத்தில் அரசியல் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணம் மார்ச் 4, 2025 அன்று பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுவரை தேஜஸ்வி சூர்யா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.