RBI: இனி இந்தப் பிரச்னை இல்லை! - பணப் பரிவர்த்தனையில் புதிய வசதி அறிமுகம்!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இப்போதெல்லாம் ஜி பே, போன் பே போன்ற ஏகப்பட்ட தனியார் ஆப்களை பணப் பரிவர்த்தனைகளுக்கு நாம் நம்பியிருந்தாலும், பெரும் அளவு பணப் பரிவர்த்தனை, முக்கிய பணப் பரிவர்த்தனைகளுக்கு இன்றும் RTGS (Real Time Gross Settlement) மற்றும் NEFT (National Electronic Fund Transfer) சேவைகளை தாம் நம்ப வேண்டியதாக இருக்கிறது.

பணப் பரிவர்த்தனையில் புதிய வசதி அறிமுகம்...

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோம் என்பதை முதலில் தேர்ந்தெடுத்தப் பிறகு பார்க்க முடியாது. ஒருவேளை, நாம் பயனாளர் பெயரை மாற்றி கிளிக் செய்திருந்தால், அதை பரிவர்த்தனை முடியும்வரை சரிபார்க்கவே முடியாது. RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளில் இது பெரிய பிரச்னையாக இருந்தது.

இனி இந்த சிக்கல் இருக்காது என்று நேற்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி, இனி யாருக்கு RTGS மற்றும் NEFT-ல் பரிவர்த்தனைக்கு முன்னால் யாருக்கு பணம் அனுப்புகிறோம் என்பதை செக் செய்துகொள்ள முடியும். இந்த வசதி வரும் ஏப்ரல் 1, 2025-க்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தவறான பரிவர்த்தனைகள் மற்றும் மோசடிகளைத் தடுக்க முடியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.