2024 NILGIRIS REWIND : குறிஞ்சி மலர்கள் டு கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் | Photo Album

ஜனவரி : நீலகிரி மாவட்டம் பந்தலுார், தாெண்டியாளம் பகுதியில் வடமாநில சிறுமியை காென்ற சிறுத்தையை பிடிக்க மக்கள் போராட்டம் வலுத்த நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்.

ஜனவரி : துண்டாடப்படும் வனப்பகுதிகளால் வலசை பாதை தவறிய காட்டு யானைக் கூட்டம் ஒன்று ரயில் பாதை வழியாக குன்னுாருக்கு மிக அருகில் வந்தன, அந்த யானை கூட்டத்தை இரவு வரை பாேராடி வனத்துறையின் விரட்டினர்.

ஜனவரி : காெடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான பூஜை சசிக்கலா தலைமையில் நடைபெற்றது, வரும் ஆகஸ்ட் மாதம் மணி மண்டபம் திறக்கப்படும் என சசிக்கலா பேட்டியளித்தார்.

பிப்ரவரி : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஜங்சன் பார் வுமன் என்ற பெயரில் பெண்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் கழிப்பறை கோத்தகிரி ஒன்னட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பெண்களுக்காக இதுபோன்ற ஜங்சன்கள் அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி அருகில் உள்ள தோடர் பழங்குடி மக்களின் கிராமமான முத்தநாடு மந்திற்கு மனைவியுடன் இன்று சென்ற ஆளுநர், தோடர் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகளான உணவு, வழிபாடு, நடனம், கலாசாரம், கால்நடை வளர்ப்பு போன்றவைக் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

மார்ச்: நீலகிரிக்குள் நுழைய வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, இ- பாஸ் பெற வலைத்தளம் முகவரி அறிவித்து, இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

மார்ச்: குன்னுாரில் தாெடர்ந்து 6 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ, ஹெலிகாப்டர் உதவியுடன் கட்டுக்குள் காெண்டுவரப்பட்டது.

ஏப்ரல்”: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுப்பெற அ.தி.மு.க ஊட்டி ஒன்றிய செயலாளர் பெள்ளி என்பவர் முயற்சி செய்ததாக வீடியாக்கள் வெளியான நிலையில்,தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

மே : நீலகிரியில் வழக்கத்துக்கு மாறாக மே மாதம் நிலவிய வெயிலின் தாக்கம் காரணமாக அவலாஞ்சி, எமரால்டு மற்றும் குந்தா அணைகள் வறண்டு காணப்பட்டது.

மே : கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்திருந்த நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா அவரது குடும்பத்தினருடன் 5 நாள் பயனமாக தனி ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.

ஜூன் : 2024 ஆண்டுடன் குன்னுார் மலை ரயிலுக்கு வயது 125, இதனை காெண்டாடும் விதமாக ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் காெண்டாடினர்.

ஜூலை : நீலகிரி மாவட்டம் கூடலுாரில் பெய்த கன மழை காரணமாக கோக்கால் குடியிருப்பு பகுதியில் பாலம் பாலமாக விரிசல் ஏற்பட்டு சுமார் 5க்கும் மேற்றபட்ட வீடுகள் சேதமடைந்தன.

ஜூலை : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி, ஊட்டி குதிரைப் பந்தைய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது.

ஆகஸ்ட் : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உணவில் சைனைடு வைத்து, மருமகளை காெலை செய்ததற்காக காெலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்த நிலையில் பாேலீஸார் காெலையாளிகளை கைது செய்த சம்பவம்.

செப்டம்பர் : நீலகிரி மலைகளை நீலப் போர்வையால் போர்த்திய குறிஞ்சி மலர்கள்.

செப்டம்பர் - ஊட்டி நகரின் பிரதான சாலையான கமர்சியல் சாலையை சுற்றுலாப் பயணிகள் நெருக்கடியில்லாமல் நடந்து செல்வதற்காக சோதனை முயற்சியாக வாகங்களை நிறுத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் "வாக்கிங் பாத்" அமைத்தது, ஆனால் அந்த முயற்சி தாேல்வியடைந்தது.

அக்டாபர் - தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் பேட்டரியில் இயங்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் பேட்டரியில் இயங்கும் "டாே நட்" போட் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்டாபர் : நீலகிரி மாவட்டம் கூடலுார் நாடுகாணி ஜீன் பூல் சூழல் சுற்றுலா மையத்தில் அந்தரத்தில் பறந்தபடி சுற்றுலாப்பயணிகள் இயற்கையை ரசிக்க ஜிப்லைன் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவம்பர் - நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுாரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு.

டிசம்பர் - ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிய கடும் குளிர் காரணமாகப் புல்வெளி முதல் கார் கண்ணாடி வரை உறைபனி சூழ்ந்தது.

டிசம்பர் - நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் அரிசி தேடி வீடுகளை சேதப்படுத்திய "புல்லட்" யானையை வனத்துறையின் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

டிசம்பர் - கோவை மாவட்டம் துடியலூர், வரப்பாளையம் பகுதியில் உடல்நிலை குன்றிய தாய் யானை உயிரிழந்த நிலையில், பிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி யானையை வனப்பகுதியில் மற்ற யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அந்த குட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.