Shreyanka Patil: ICC வளர்ந்து வரும் வீராங்கனை விருதுப் பட்டியலில் இந்தியர்; RCB வீராங்கனை வெல்வாரா?!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில், ஒவ்வொரு வருடமும் ``வளர்ந்து வரும் வீராங்கனை (Womens emerging cricketer)” விருதும் ஒன்று.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், தென்னாப்பிரிக்காவின் அன்னேரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சாஸ்கியா ஹார்லி, அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோருடன் இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலும் இடம் பிடித்திருக்கிறார்.
ஸ்ரேயங்கா பாட்டீல்:
கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது இளம் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல், 2023 டிசம்பரில் இங்கிலாந்துக்கெதிரான டி20 போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் போட்டியிலும் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். சுழற்பந்துவீச்சாளரான இவர், 2023-ல் நடைபெற்ற பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.
இந்த ஆண்டில், 13 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும், இரண்டு ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெடுகளையும் வீழ்த்தியிருக்கிறார். நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் நான்கு ஓவர்களில் விக்கெட் மெய்டன் ஓவர் உட்பட வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். பெண்களுக்கான ஐ.பி.எல்லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயங்கா பாட்டீல், 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருது பெற வாழ்த்துகள்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/Neerathikaaram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

