Pushpa 2: அதுகுறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது, ஆனால்...- தேவி ஸ்ரீ பிரசாத் பற்றி நகாஷ் அசிஸ்

புஷ்பா-2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத், "தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான நமக்கு வரும் பாராட்டாக இருந்தாலும் சரி, நாம் அதைக் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கேட்வில்லை என்றால், யாரும் நமக்குத் தகுதியான நன்மதிப்பைக் கொடுக்க மாட்டார்கள்" என்று தயாரிப்பாளர் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

தேவி ஸ்ரீ பிரசாத்

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் புஷ்பா-2 படத்தில் ஏய் பித்தா யே மேரா அட்டா என்ற ஹிட் பாடலைப் பாடிய நகாஷ் அசிஸிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த நகாஷ் அசிஸ், "இந்த சம்பவம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. எனக்கு இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை. சில நேரங்களில் எனது சம்பளத்திற்கான பில்லை நான் அனுப்ப மறந்தால் கூட எனது இசை அமைப்பாளர்கள் அனுப்பச் சொல்லி எனக்கு நினைவூட்டுவார்கள்.

தென்னிந்திய இசைத் துறையைப் பொறுத்தவரை மிகவும் நேர்மையான நெறிமுறைகளைக் கொண்டதாகத்தான் கருதுகிறேன். அதே பாலிவுட்டைப் பொறுத்தவரைப் பார்த்தால் பலருக்கும் பல்வேறு சித்தாந்தங்கள் இருக்கும். அதனால் சில நேரங்களில் பணிபுரிவது குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

நகாஷ் அசிஸ்

பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பேசிய அவர், " என் உயரம் காரணமாக அவர் என்னை லம்பு அசிஸ் என்று அழைப்பார். தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாலை 4 மணிக்கு கூட அவர் ஸ்டுடியோவில் இருந்து பணியாற்றுவார். எப்போதும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.