Pushpa 2: `ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு -தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

புஷ்பா 2 சிறப்பு திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே மாநில அரசு, தெலங்கானாவில் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சிகள் போன்றவைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசுவதற்காக, இன்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் முன்னணி நடிகர்கள் சேர்ந்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான தில் ராஜு, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.