Vijay : அலங்கு டிரெய்லர் பார்த்த விஜய் - வாழ்த்துப் பெற்ற அன்புமணி மகள் & பட டீம்!
உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கும் மற்றொருப் படம் அலங்கு. குணாநிதி காதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா செளமியா தயாரித்திருக்கும் இந்தப் படம், தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
WHAT A MOMENTOUS OCCASION ❤️
— Sony Music South India (@SonyMusicSouth) December 25, 2024
Team #Alangu meets THE THALAPATHY #Alangufromdec27th ❤️
➡️ https://t.co/kqYp9sZdPD @DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor #Sarathappani @ajesh_ashok #Chembanvinod @D_Sabareesh_ @SangamAnbu @DGfilmCompany @SakthiFilmFctry pic.twitter.com/zLsrkIDGQF
இந்தப் படம் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், படக் குழு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்றது. திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்த நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் படக்குழுவினரைப் பாரட்டியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

