மும்பை: கணவனை ஜாமீனில் எடுக்க, ஒரு மாத மகளை விற்க முயன்ற தாய் - 9 பேர் கைது

மும்பையில் அடிக்கடி குழந்தைகள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.

சமீபத்தில் மும்பை தாதர் திலக் மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தன் குழந்தையை விற்பனை செய்ய இருப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்குச் சென்று விசாரித்தபோது தாதர் பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்ற பெண்ணைக் கைது செய்தனர். அப்பெண் தனது ஒரு மாதக் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா கூறுகையில்,விற்பனை செய்யப்பட்ட குழந்தை கர்நாடகாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை விற்பனை செய்த பெண்ணின் கணவர் சிறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அவரை ஜாமீனில் எடுக்க சுலோச்சனாவிடம் பணம் இல்லை. இதையடுத்து தன் ஒரு மாத குழந்தையை விற்பனை செய்து ஒரு லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட சுலோச்சனாவிடம் விசாரணை நடத்தி மேலும் 8 பேரைக் கைது செய்துள்ளோம். அதில் திருமண புரோக்கர்களும் அடங்கும். 9 பேரும் சேர்ந்து குழந்தைகள், இளம் பெண்களை கடந்த பல மாநிலங்களில் கடத்தி விற்பனை செய்துள்ளனர். அவர்கள் கடத்திய பெண்களை பாலியல் தொழிலிலும் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கவும் வைத்திருக்கின்றனர். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். " என்றார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.