Rain Alert: சென்னைக்கு கன மழை எச்சரிக்கை... 3 நாள்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி,

நாளை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட்

நாளை மறுநாள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யலாம்.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கன மழை பெய்யலாம்.

வரும் வியாழக்கிழமை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் இங்கு கன மழை பெய்யலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.