Rain Alert: நாளை கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்?

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது, தென் மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி,

நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் கன மழையில் இருந்து அதிக கன மழை வரை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/dLsSlQcXBf

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 15, 2024

வரும் புதன்கிழமை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதிக கன மழையில் இருந்து கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

வரும் வியாழ கிழமை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.