Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்த்தம்!
தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் என்பதை உளவியல் அடிப்படையில் எப்படி தெரிந்துகொள்வது என நமக்குச் சொல்கிறார்கள், உளவியல் ஆலோசகர் வருண் மற்றும் திவ்யபிரபா.
நெருங்கிய நட்பில் துளிர்க்கிற காதலை பிலியா (philia) என்று உளவியல் சொல்கிறது. இந்தக் காதல் எதிர் பாலினத்துடன் அல்லாமல் ஒரே பாலினத்துடன்கூட ஏற்படலாம். இவர்கள் ஒரே நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக, ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதனால் ரகசியங்களைக்கூட பகிர்ந்துகொள்வார்கள். நேசிப்பவரின் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற அளவுக்கு மிகுந்த அன்புடன் இருப்பார்கள். இதன் அடுத்த நிலையில் உடல்ரீதியான ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். இதை எரோஸ் (eros) என்கிறது உளவியல்.
இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதை ப்ராக்மா (pragma) என்போம். காதல் தொடர்ந்து இருப்பதற்காகச் செய்யப்படுகிற முயற்சிகள்தான் ப்ராக்மா. ஆக, ஒரு தோழி காதலியாவது திடீரென ஏற்பட்டு விடாது. பிலியா, எரோஸ், ப்ராக்மா ஆகிய மூன்று நிலைகளில் வளர்ந்துதான் அது காதலாகும். மேலே சொன்ன அறிகுறிகள் உங்கள் நட்பில் இடம்பிடிக்க ஆரம்பித்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கவும் ஆரம்பித்துவிட்டான் என்று புரிந்துகொள்ளலாம்.

நட்பு காதலானால்... என்னென்ன பிளஸ் இருக்கும்?
நட்பு காதலாக மாறும்போது, உருவம் தாண்டி இயல்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். பெண் முதலில் காதலைச் சொன்னால், அவளை தவறாக நினைக்காது. பிரேக் அப் சொன்னாலும் ஆசிட் வீச துணியாது. அவளுடைய பிரச்னைகளுக்குக் காது கொடுக்கும். பெண்ணுடைய இடத்திலிருந்து யோசிக்கிற எம்பதியும் இருக்கும். இந்த வகை காதல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. இத்தனை பிளஸ்கள் இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு முதல் பார்வையில் வருகிற காதலைவிட நட்பில் துளிர்க்கிற காதலே சிறந்தது என்பதை மட்டும் சொல்ல முடியாது. இது நபருக்கு நபர் மாறுபடும் என்பதோடு, இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், பேசி, பழகி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, பரஸ்பரம் செளகர்யமாக உணர்ந்தபின் திருமணம் செய்துகொண்டால், அந்த உறவில் பிரச்னைகளை தாங்குகிற ஷாக் அப்சார்பர் நன்றாக இருக்கும் என்று தோழமை காதலாக மாறுவதன் நன்மைகளை அடுக்கியவர், தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிற பெஸ்ட்டீ கூட பிலியாதான். இதனுடன் எரோஸ், ப்ராக்மா இரண்டும் சேரும்போது அது காதலாகலாம் என்கிறார்.
நண்பனே காதலன் ஆகிவிட்டால்...
உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா பேசுகையில், தோழியைச் சார்ந்து இருக்க ஆரம்பிப்பது, டேக் இட் ஃபார் கிராண்டடாக தோழியை நடத்துவது, வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் தோழி தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது, உடல்ரீதியாக தோழியுடன் நெருக்கம் காட்ட முனைவது போன்றவை, ஓர் ஆண் தன்னுடன் நட்பாக இருக்கிற பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான் என்பதற்கான அடையாளங்கள். இப்படியொன்று உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், நண்பனே காதலன் ஆகிவிட்டால் நல்ல கணவனாகவும் இருப்பான் என்று கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது.

பெண்ணும் காதலனாகப் பார்த்தால் மட்டுமே...
ஓர் உண்மை சம்பவம் சொல்கிறேன். நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணும் சரியென்று தலையாட்டி விட்டாள். ஆனால், திருமணமானதும் நண்பனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு அந்தப் பெண்ணுக்கு வரவில்லை. தோழியை காதலியாக ஆண் மட்டுமே பார்த்தால் போதாது. தோழனை பெண்ணும் காதலனாகப் பார்த்தால் மட்டுமே அந்த உறவு முழுமையடைய முடியும். அதனால், தோழனே என்றாலும் தனக்கு அவன்மீது ஈடுபாடு இருக்கிறதா என்பதை யோசித்து முடிவெடுங்கள். கூடவே, தனக்குக் கணவனாவதற்கும் தன் வீட்டுக்கு மருமகனாவதற்கும் நண்பன் ஏற்றவனா என்பதையும் நிதானித்து முடிவெடுங்கள் என்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


