Allu Arjun Stampede Case : ரசிகை உயிரிழந்த வழக்கு; சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன்
சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்திருக்கிறார்.
புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாகத் திரைப்பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.
இதனிடையே ஜாமீன் கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடைபெற்று ஜாமீன் நேற்றிரவே வழங்கப்பட்டது. அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கவில்லை என்பதால் சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


