நான் குப்பைகளைச் சாப்பிடுவேன் - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா?!
ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு தளத்தில் தானாகவே நடமாடும் குப்பைத்தொட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரிடமும் சென்று கையில் இருக்கும் குப்பைகளைக் கேட்கும் குப்பைத்தொட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் குப்பைத்தொட்டி நகருவது மட்டுமல்லாமல் பேசவும் செய்வது, சுற்றியிருந்த மக்களை ஈர்ப்பதைக் காண முடியும். டிஸ்னிலேண்டில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைத்தொட்டி, அங்கு வருபவர்களிடம் குப்பையைக் கேட்டு அழுகிறது. குப்பையைச் சாப்பிடுப்போவது போல குப்பைக்காக அழும் இதனை மக்கள் வெகுவாக ரசிப்பதை வீடியோவில் காண முடியும்.
View this post on InstagramA post shared by Luckystarry (@luckystarry_hung)
உள்ளூர் பாஷையில் பேசும் அந்த குப்பைத்தொட்டி, "நான் குப்பைகளைச் சாப்பிட வேண்டும், இங்கு எதாவது இருக்கிறதா? ஆ.... இங்கு எதுவும் இல்லை, குப்பை இல்லை" என அழுதபடி செல்கிறது.
அந்த குப்பைத்தொட்டியில் ஒரு பெண் குப்பையைப் போட்டதும், "ஆ, குப்பை இருக்கிறது. யம்யம்" என சந்தோஷமாகிறது.
ஹாங்காங் டிஸ்னிலேண்டின் இந்த நகைச்சுவையான உருவாக்கம், மக்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் குப்பைகளை தொட்டியில் போடுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
பொழுதுபோக்காகவும், புதுமையாகவும், மக்களுடன் தொடர்பு கொள்வதாகவும், விழிப்புணர்வு வழங்குவதாகவும், சுத்தப்படுத்துவதாகவும் என ஒரே கல்லில் பல மாங்காய் அடித்திருக்கிறது இந்த குப்பைத்தொட்டி.
சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகின்றது. பலரும் இதை வரவேற்றுள்ளனர். இது சென்னை மாநகராட்சியின், "ஓஹோ... இந்த ஊரு, சுத்தி பாரு, சுத்தம் பாரு" எனப் பாடிவரும் துப்புறவு வண்டியின் இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ...?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


