சொத்து தகராறு: ``30 அடியாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த மகன் - காவல்நிலையத்தில் புகாரளித்த நடிகர்!
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு. இவருக்கு மகள் லட்சுமி மஞ்சு. மகன்கள், மனோஜ் மற்றும் விஷ்ணு மஞ்சு என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று நடிகர் மஞ்சு மோகன் பாபு, தன் மகன் மனோஜ் மஞ்சு - மருமகள் மோனிகா மீது ரச்சகொண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``என் மகன் மனோஜ் பலவந்தமான என் வீட்டுக்குள் சட்டவிரோதிகள் 30 பேருடன் நுழைந்து, என் பணியாளர்களை மிரட்டியிருக்கிறார். மேலும், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும், அவர்களின் அனுமதி இன்றி இனி யாரும் வீட்டுக்கு வரக்கூடாது எனவும் மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.
என் மகனும், மருமகளும், எங்கள் பேத்தியை எங்கள் வீட்டுக்குள் விட்டுச்சென்று, அவளை பராமரிக்க ஒரு பணியாளை நியமித்திருக்கிறார்கள். சட்டவிரோதமாக, என் வீட்டை அபகரித்திருக்கிறார்கள். என் உயிருக்கும், என் பொருளுக்கும், என் சொத்துக்கும் ஆபத்து இருப்பதால், அவர்கள் மீதும், 30 சட்ட விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்னதாக மனோஜ் மஞ்சு தனது தந்தை மோகன் பாபு மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடதக்கது. சொத்து தகராறு காரணமாக 7 மாதங்களுக்கு முன்பு மனோஜ் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தற்போது அந்த சொத்து விவகாரம் தீவிரமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகயிருக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

