Rashmika: 8 வருடங்களுக்கு முன்பு சந்தித்த அதே பெண்ணாக - ரஷ்மிகா குறித்து நெகிழும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுனுடன் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா 2 நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இவரின் அடுத்த திரைப்படமாக The Girlfriend படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீஸரை நடிகர் விஜய் தேவரகொண்டா தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவும், நடிகை ரஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இருவரும் தற்போதுவரை அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அதேநேரம் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் ஆதரவைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.

விஜய் தேவரக்கொண்டா - ரஷ்மிகா

The Girlfriend படத்தின் டீஸரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா தன் எக்ஸ் பக்கத்தில், "இந்த டீசரின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் பாடத்தைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். எங்களில் பல நடிகர்களுக்கு அவர் ஒரு அதிர்ஷ்டமாகவும், வசீகரமாகவும் இருந்து, எங்களின் மிகப்பெரிய வெற்றிகளின் ஒரு பகுதியாக இருந்தவர் ரஷ்மிகா. ஒரு நடிகராக, நட்சத்திரமாக இவ்வளவு பெரிய உயரத்தை எட்டினாலும், 8 வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே பெண்ணாகவே இருக்கிறார். இன்னும் அதிக உயரத்தைத் தொட வாழ்த்துகிறேன் ரஷ்மிகா" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக ரஷ்மிகா தன் எக்ஸ் பக்கத்தில், "விஜய் தேவரகொண்டா எங்களுக்காக இவ்வளவு பெரிய உதவி செய்ததற்கு நன்றி. உங்களின் இந்த வார்த்தைகளுக்காக உங்களையும், அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன். உங்களின் இந்த வார்த்தைகளுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.