Kalidas Jayaram: குருவாயூரில் நடந்த காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! - குவியும் வாழ்த்துகள்

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.

நடிகர் ஜெயராம் அவர்களின் மகனான காளிதாஸ் ஜெயராம் , தமிழில் மீன் குழம்பும் மண் பானையும், பூமரம், ஒரு பக்க கதை, பாவகதைகள் போன்ற பல படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் காளிதாஸ் மாடலான தாரிணி களிங்கராயர் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.

அதனை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணி திருமணம் இன்று கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிக விமர்சையாக நடைபெற்றிருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.