Charlotte Dujardin: குதிரையைத் துன்புறுத்திய ஒலிம்பிக் வெற்றியாளருக்கு ஓராண்டு தடை; நடந்தது என்ன?
ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற பிரிட்டிஷ் குதிரையேற்ற வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினுவிற்கு (Charlotte Dujardin) ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினு, தனது குதிரையை அதிகமாகச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தியதற்காகக் குற்றம்சாட்டப்பட்டார். நான்கு வருடத்துக்கு முன்பு, அவர் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கடந்த ஜூலை மாதம் வெளியானது. டுஜார்டின் ஒரு மாணவனின் குதிரையைப் பலமுறை சவுக்கால் அடிப்பதுபோல காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஒரு நிமிடத்திற்குள் 20க்கும் மேற்பட்ட முறை குதிரையைச் சவுக்கால் அடித்தது அதில் தெரியவந்தது. இதன் விளைவாக, இந்த கோடையில் பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து டுஜார்டின் விலகினார். இதற்கிடையில், FEI (குதிரையேற்ற விளையாட்டுகளுக்கான கூட்டமைப்பு) டுஜார்டினை ஒரு வருடத்துக்குப் போட்டிகளில் கலந்துகொள்ள தடை வித்திருக்கிறது. மேலும், 10,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பத்திருகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய டுஜார்டின், "அந்த சம்பவத்துக்கு நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டில் எனது பொறுப்பை நான் புரிந்துகொள்கிறேன். மேலும் நான் எப்போதும் சிறப்பாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். இது சந்தேகத்திற்கு இடமின்றி, எனது வாழ்க்கையின் இருண்ட மற்றும் கடினமான காலகட்டம். மேலும், இந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

39 வயதான டுஜார்டின் 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கில் குழு மற்றும் தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்றவர். 2016 ரியோ டி ஜெனிரோ விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றார். 2021 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் குழு மற்றும் தனிநபர் பிரிவில் வெண்கலம் மற்றும் ரியோவில் நடந்த போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


