எதிரிகள் தொல்லை நீங்க தீப வழிபாடு

நாம் அனைவரும் நம்முடைய வேலையிலோ, குடும்பத்திலோ, பொருளாதார அடிப்படையிலோ முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகிறோம். அப்படி முன்னேற்றத்தை அடையும் பொழுது நம்மை அறியாமலேயே நம்முடன் இருக்கக் கூடியவர்களே நமக்கு எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். நம்முடன் இருந்து கொண்டு எப்படி இவன் இவ்வளவு தூரம் முன்னேறி விட்டான் என்ற ஒரு பொறாமை குணம் அவர்களுக்குள் ஏற்பட்டு விடும். அதன் மூலம் அவர்கள் சில தீய செயல்களில் ஈடுபட்டு நம்முடைய முன்னேற்றத்தை பாதிப்படைய செய்வார்கள். அப்படிப்பட்ட எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகள் தொல்லை நீங்க தீப வழிபாடு

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று கஷ்டப்பட்டு முன்னேறிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவர்களை சுற்றி இருக்கக்கூடியவர்களால் ஏதாவது ஒரு வித பிரச்சனை வந்து அவர்களுடைய முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும் பொழுது இந்த தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த தீப வழிபாட்டை நாம் நம்முடைய வீட்டில் முதலில் செய்ய வேண்டும். அப்பொழுது நமக்கு நல்ல மாற்றம் உண்டாகும். ஒரு வேளை வீட்டில் இந்த தீப வழிபாட்டை செய்தும் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்னும் பட்சத்தில் ஆலயத்தில் சென்று இந்த வழிபாட்டை செய்யலாம்.

இந்த தீப வழிபாட்டை வீட்டில் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. வீட்டின் தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு ஒரே ஒரு அகல் விளக்கு இருந்தால் போதும். வேப்ப எண்ணெய் ஊற்றி வெள்ளை நிற பஞ்சுத்திரி போட்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் குளிர வைக்க கூடாது. அதுவாகவே குளிர வேண்டும். இப்படி தினமும் நாம் வேப்பெண்ணை தீபத்தை வீட்டில் இந்த மூலையில் ஏற்றுவதன் மூலம் எதிரிகளின் தொல்லை என்பது நீங்கும்.

ஒரு வேளை முழுமையாக எதிரிகளின் தொல்லை நீங்கவில்லை என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய ராகு காலமான 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் வேப்பெண்ணெய் ஊற்றியும் மற்றொரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றியும் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து கொண்டு வருபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுடைய முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய அளவில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை என்பது முற்றிலும் நீங்கிவிடும்.

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் எதிரிகள் எவ்வளவு நம்மை கஷ்டப்படுத்தினாலும் அவர்களை நாம் திரும்ப எந்தவித கஷ்டமும் படுத்தாமல் திட்டவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். யாரின் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த வழிபாடு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: காரியசித்தி தரும் மந்திரம்

எளிமையாக இருக்கக்கூடிய இந்த தீப வழிபாட்டில் பல அற்புதமான அபரிவிதமான சக்தி நிறைந்திருக்கிறது. முழுமனதோடு நம் மீது எந்த தவறும் இல்லை என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி அந்த தீபத்திற்குரிய பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post எதிரிகள் தொல்லை நீங்க தீப வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.