Ambedkar Book Launch | Vikatan: ``அம்பேத்கர் இசைஞானி இளையராஜாவைப் போன்றவர்தான்!- ராப் பாடகர் அறிவு

இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்.’ இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுவருகிறது.

இந்த விழா இன்று சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விஜய், சரியாக 5 மணிக்கு நிகழ்ச்சி அரங்குக்கு வந்தார்; உற்சாகத்துடன் மேளதாளங்கள் அடிக்கும் இடத்தில், மேளத்தை அடித்து மகிழ்ந்தார். கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தருண் இசைக்குழு `அம்பேத்கர், இயற்கை அனைவருக்கும் பொதுவானது என்ற பாடலைப் பாடினார்கள். இதையடுத்து ராப் பாடகர் அறிவு அம்பேத்கர் பற்றிய பாடல்களைப் பாடியபடி, விஜய்க்கு அம்பேத்கர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

விஜய், ராப் பாடகர் அறிவு

இதைத் தொடர்ந்து பேசிய ராப் பாடகர் அறிவு, "மாடு மேய்த்தவர்களின் பிள்ளைகளை மந்திரிகளாக்கியவர். ஆடு மேய்த்தவர்களின் பிள்ளைகளை அதிகாரிகளாக்கியவர். ரொம்ப ரொம்ப முக்கியமான நாள் இது. என்னைப் பொறுத்தவரை பாபாசாகேப் அம்பேத்கர் ஓர் இசையமைப்பாளரைப் போன்றவர்தான். அவர் ஒரு சிம்போனி இசைக்கலைஞர்... இசைஞானி இளையராஜா மாதிரி. சத்தங்களை ஒழுங்குபடுத்தி, ஒருங்கமைப்பதுதான் இசை. சமூகங்களை ஒழுங்குபடுத்தி, ஒருங்கமைத்தவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். டிச.6-ம் தேதி அவரது நினைவுநாள். கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்திய நாள் இது. அதே நாளில் அவர் உயிர்த்தெழுந்தார், கோடிக்கணக்கான மக்கள் மனதில்.

பலியிடுவது ஆடுகளைத்தான்... சிங்கங்களை அல்ல. எழுத்துகளின் மூலம் சிங்கத்தின் மொழியில் பேசியவர். அவர் எழுத்துகளைப் படிப்பவர்கள் சிங்கங்களாக மறிவிடுவார்கள்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.