Ambedkar: அம்பேத்கரின் `விசாவுக்காக காத்திருக்கிறேன்’- இனி கேட்கலாம் மணிகண்டன் குரலில்| Vikatan Play

அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூல்களில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று `விசாவுக்காக காத்திருக்கிறேன்’. சிறிய புத்தகமாக இருந்தாலும் அம்பேத்கர் தன் சொந்த அனுபவங்களின் தொகுதிகளாக இந்த புத்தகத்தை எழுதியிருப்பதனால் இதன் தாக்கம் அதிகம்.

சாதிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்றால் இந்தச் சமூகத்தில் சாதி என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி அறிந்துகொள்வதற்கு துணைபுரியும் நூல் விசாவுக்காக காத்திருக்கிறேன்.

மஹர் சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர் அவரது அனுபவங்களின் வழி, ஒரு தலித் எத்தகைய உடை உடுத்தியிருந்தாலும், எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் இந்திய சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கும் நிர்பந்தத்திலேயே இருக்கிறார் என்பதை விளக்கியிருப்பார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீடு

கல்வியில் சிறந்து விளங்கினும், செல்வம் சேர்ப்பினும், நல்ல பதவியில் இருந்தாலும் ஒரு தீண்டத்தகாதவராக தான் பட்ட அவமானங்களையும் அதனால் தன் மனம் சுமந்த பெரும் வேதனைகளையும் வெளிப்படையாக எழுதியிருப்பார் அண்ணல் அம்பேத்கர்.

அண்ணல் கைப்பட எழுதியவை உட்பட 6 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் சாதியத்தின் கொடுமையை வெளிக்காட்டுவதாகவே அமைந்திருக்கும். அவற்றில் 4 அண்ணலின் சொந்த அனுபவங்களாகவும் 2 அவர் கேட்டறிந்த, தெரிந்துகொண்ட விஷயங்களாகவும் இருக்கும்.

அம்பேத்கர் சிறுவனாக இருந்தபோது குறிப்பிட்ட சமூகம் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு இரவு முழுவதும் தண்ணீர் கிடைக்காமல் உறங்கும் நிலை ஏற்பட்டதையும், அவர் சரியாக வாடகை கொடுக்க முடிந்த ஒரு அறையிலும் தீண்டத்தகாதவர் என்பதற்காக தங்கும் வசதி மறுக்கப்பட்டதையும் அந்த நேரத்தில் இளைஞராக அவர் உணர்ந்த அவமானத்தையும் பட்டவர்த்தனமான எழுதியிருக்கிறார்.

vikatan-play-mobile
vikatan-play-mobile

இந்து மதமே சாதியின் பிறப்பிடம் என்றாலும் இந்திய சமூகத்தில் தீண்டத்தகாதவராக கருதப்படும் ஒருவர் பிற மதத்தவராலும், இனத்தவராலும் அவ்வாறே கருதப்படுவார் என்ற வலிமிகுந்த உண்மையை இந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அண்ணல்.

சாதியத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் ஒவ்வொருவரும் தூக்க வேண்டிய மிக முக்கியமான ஆயுதம் அண்ணலின் விசாவுக்காக காத்திருக்கிறேன் நூல்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு மேடையில் இன்று விசாவுக்காக காத்திருக்கிறேன் ஆடியோ புத்தகமும் வெளியிடப்பட்டது.

விகடன் ஆப்பில் பிளே பிரிவில் ஆடியோ புக் வடிவில் கிடைக்கிறது. ஜெய்பீம், குட் நைட் திரைப்படங்களில் நடித்த மணிகண்டன் குரலில் இந்த நூல் உருவாகியிருப்பது இதன் தனிச்சிறப்பு!

https://www.vikatan.com/audio-book/195786/politics/2024/12/03/oru-visavukkaga-kathirutthal

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.