MPSC Exam 2024: கருவுறுதல், மது அருந்துதல் குறித்து சர்ச்சையான கேள்வி.. தேர்வுக்குழு என்ன சொல்கிறது?
MPSC Preliminary Exam: மகாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதற்கட்ட ப்ரிலிமினரி தேர்வில் கருவுறுதல் குறித்த பெண்களின் கல்வி மற்றும் மது அருந்துதல் தொடர்பான இரண்டு கேள்விகள் சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்டு இருந்தது. கல்வி ஆர்வலர்கள் மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மத்தியில் இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
டிசம்பர் 1 அன்று நடைபெற்ற எம்.பி.எஸ்.சி ப்ரீலிம்ஸ் தேர்வின் சர்ச்சைக்குரிய கேள்விகள்:
1) பெண்களுக்கான கல்வி கருவுறுதலைக் குறைக்கிறது...... என்ற கேள்விக்கு நான்கு பதில்கள் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் இருந்தன. அவை,
"கல்வி பெண்களுக்கான வேலை வாய்ப்பை மேம்படுத்துகிறது",
"படித்த பெண்கள் தங்கள் குழந்தைகள் படிப்பதை விரும்புகிறார்கள்",
"கல்வியறிவு பெண்களுக்கு கருத்தடை குறித்த தகவல்களை அதிகம் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது"
"பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது"
2) நண்பர்களின் வற்புறுத்தலின் பேரிலும் மது அருந்துவதைத் தவிர்ப்பது குறித்து மற்றொரு கேள்வி எழுந்தது. கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அவை,
"எனது பெற்றோர் மது அருந்த மறுத்திருப்பதை என் நண்பர்களிடம் கூறுவேன்"
"மது அருந்த மறுப்பேன்"
"நண்பர்கள் குடிப்பதால் தானும் மது அருந்துவேன்"
"மது அருந்த மறுத்து எனக்கு கல்லீரல் நோய் உள்ளது என பொய் கூறுவேன்"
தேர்வு எழுதியவர்கள், எம்.பி.எஸ்.சி கேள்வியை வடிவமைப்பதில் தவறிழைத்து உள்ளதாகவும், ஆகையால் தேர்வின் திறன் குறித்து கேள்விகள் எழுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர். "பெண்களின் கல்வியானது பிரசவத்தோடு இணைக்கப்படலாம் ஆனால் கருவுறுதலோடு அல்ல. இதுபோன்ற கேள்விகள் கேட்பது நிச்சயம் தவறுதான், என, தேர்வு எழுதிய நபர் ஒருவர் கூறினார்.
பெண் உரிமை ஆர்வலர் பாரதி பிஸ்வாஸ்-பண்டேகர், பெண்கள் கல்வி மற்றும் கருவுறுதல் குறித்து எம்.பி.எஸ்.சி.யின் கேள்வி எழுப்புவது துரதிர்ஷ்டவசமானது. படித்த பெண்களின் கருவுறுதல் குறைவு என்பது அறிவியல் பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை. எம்.பி.எஸ்.சி தவறான தகவல்களை பரப்புகிறது, அதன் நிபுணர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்." என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.பி.எஸ்.சி செயலாளர் சுவர்ணா காரத் "முதற்கட்ட தேர்வுக்கான வினாத்தாளை நிபுணர்கள் குழு வடிவமைத்துள்ளது. தேர்வு நாளில் வினாத்தாள் விநியோகிக்கப்படும் வரை நான் உள்பட எம்.பி.எஸ்.சி அலுவலகப் பணியாளர்களில் யாருக்கும் கேள்விகள் தெரியாது," என கூறியுள்ளார்.
கேள்விகளின் தன்மை குறித்து கேள்விகளை வடிவமைத்த நிபுணர்கள் குழுவிடம் விளக்கம் கேட்கப்படுமா என்ற கேள்விகளுக்கு சுவர்ணா காரத் தயங்கினார்.
கல்வி ஆர்வலர் பிரசாந்த் சாத்தே, "எம்.பி.எஸ்.சி.யின் கேள்விகள் மோசமான செயல்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எம்.பி.எஸ்.சி இளைஞர்களின் திறனைத் தட்டியெழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் எம்.பி.எஸ்.சி யின் கேள்விகள் நிச்சயமாக சந்தேகத்தை எழுப்பியுள்ளது." என்றார்.

மாணவர்களின் தலைவர் துக்காராம் சராப் கூறுகையில், "மது தொடர்பான கேள்வி மூளை அற்றது. எம்.பி.எஸ்.சி ப்ரிலிமினரித் தேர்வில் தெளிவான பதிலுடன் இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. எம். பி. எஸ். சி கேலிக்குரிய பொருளாக மாறுவதற்கு முன்பு அதன் தரத்தை தீவிரமாக உயர்த்த வேண்டும்" என்றார்.
மது குறித்த கேள்வி, சமூக ஊடகங்களில் பலவகையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு என அழைக்கப்படும் இளைஞர் இயக்கம் எம்.பி.எஸ்.சி யை ஆதரித்தது, "முடிவெடுத்தல் மற்றும் வேட்பாளர்களின் IQ மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட இதுபோன்ற கேள்விகளைக் கேட்க எம்.பி.எஸ்.சி.க்கு முழு உரிமை உண்டு" என்று X பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

