Pushpa 2: ``எந்தப் படத்துக்கும் சிறப்புக் காட்சி கிடையாது - பார்வையாளர் உயிரிழப்பு; அரசு அதிரடி!

தெலுங்கானா மாநிலத்தில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவித்திருக்கிறார்கள்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் நேற்றைய தினம் `புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சி கடந்த டிசம்பர் 4-ம் தேதி தெலுங்கானா சந்தியா திரையரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பு காட்சியைக் காண அல்லு அர்ஜூனும் வந்திருக்கிறார். ஏற்கெனவே ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சியைக் காண அதிகளவிலான ரசிகர்கள் திரையரங்கத்தை சூழந்திருக்கின்றனர். அதே சமயத்தில் அல்லு அர்ஜூனை காண இன்னும் அதிகளவிலான ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்திருக்கின்றனர். கடும் கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

Pushpa

இந்த பெருங்கூட்டத்தில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்திருக்கிறார். அவரின் மகன் தேஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அல்லு அர்ஜுன், அவரின் பாதுகாப்பு குழுவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அம்மாநில அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, "தெலுங்கானா மாநிலத்தில் இனி எந்தப் படத்துக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை" என அறிவித்திருக்கிறார். இதே போல வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்திலும் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்திருந்தார். அதன் பிறகுதான் தமிழக அரசு அதிகாலை சிறப்புக் காட்சிகளை முழுவதுமாக ரத்து செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.