``விவசாயக் கடன் 1.6 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்வு! - இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்
இன்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார் சக்திகாந்த தாஸ்.
அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் எப்போது குறைக்கப்படும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். அதற்கேற்ப, இந்தக் கூட்டத்திலும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. முன்பு இருந்த அதே 6.5 சதவிகிதம் தொடர உள்ளது. இந்த வட்டி விகிதம் இப்படியே தொடர்வது இத்தோடு 11-வது முறை ஆகும்.
இதுகுறித்து சக்திகாந்த தாஸ் சொல்லும்போது, "பணவீக்க உயர்வு மற்றும் ஜி.டி.பி வீழ்ச்சி ஆகியவை இருந்தாலும், ரெப்போ வட்டி விகிதம் அப்படியாகவே தொடர்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதம் என்பதில் மாற்றமில்லை.
இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து உணவுகளின் விலையும் எதிர்பார்த்ததை விட எகிறியது. அடமானம் இல்லாத விவசாயக் கடனின் வரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

