நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால் போட்ட பணம் என்ன ஆகும்?!

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசை சேமித்து மட்டும் வைக்காமல், அதை பெருக்குவதற்கான சிறந்த ஆப்ஷன் மியூச்சுவல் ஃபண்ட். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயமாக இருக்கிறது என்பவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நல்ல ஆப்ஷன். இது பங்குச்சந்தை பற்றிய புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கி, இழப்புகளை சந்திப்பதை தடுக்கும்.

அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்ல...கண்ண மூடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யறோம். ஆனா, அந்த நிறுவனத்தை மூடிட்டா என்ன பண்றது? என்பவர்களுக்கு, கவலை வேண்டாம் என்பது தான் பதில். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை எடுத்த உடனே எல்லாம் அசால்டாக மூடிவிட முடியாது. அதற்கு என நீண்ட நடைமுறை உள்ளது.

உங்கள் பணம் என்ன ஆகும்?!

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்படுகிறது என்றால் அது முன்னரே செபியிடம் தெரிவித்திருக்க வேண்டும். பின்னர், அதுக்குறித்து ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தெரிவிக்க வேண்டும். கடைசியாக. அந்த நிறுவனத்தின் அப்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு ஃபண்டுகள் பிரித்துக் கொடுக்கப்படும்.

ஒருவேளை அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்குகிறது என்றால் ஒன்று உங்கள் முதலீடுகள் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியாகவே தொடரும் அல்லது உங்கள் முதலீடுகள் புதிய நிறுவனத்தின் முதலீடுகளோடு இணைக்கப்படும். அவ்வளவு தான். ஆனால், உங்கள் முதலீட்டிற்கு பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பும் வராது.

இருந்தாலும், நீங்கள் முதலீட்டை தொடங்கும்போதே, நிறுவனத்தை ஆராய்ந்து சரியான மற்றும் நம்பிக்கையான நிறுவனத்தில் முதலீடு செய்வது நல்லது.

ஹேப்பி இன்வெஸ்டிங்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.