Rain Alert: `தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காற்று அழுத்த தாழ்வுப் பகுதி?! - வானிலை மையம் சொல்வதென்ன?!

ஃபெஞ்சல் புயலின் தாக்கமே தமிழ்நாட்டில் இன்னும் குறையாதப்பட்சத்தில், மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வுப் பகுதியை தமிழ்நாடு சந்திக்க உள்ளது போலும்.

"தென் மத்திய வங்கக் கடலில் புதிய காற்று அழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது மேற்கு வட மேற்கு பகுதியில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதியை நோக்கி வரும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல வானிலை மையத்தின் நேற்றேய அறிக்கையின் படி...

தென் மண்டல வானிலை மையத்தின் நேற்றைய அறிக்கையின் படி, "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதனால், இன்று தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

நாளை முதல் செவ்வாய் கிழமை வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் புதன்கிழமை, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.