1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல்லாம் பயன்படும்?

அறிவியலாளர்கள் நீண்ட நாள்களுக்கு தாக்குபிடிக்கக் கூடிய பேட்டரியை உருவாக்கியிருக்கின்றனர். இது ஆயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து கருவிகளுக்கு மின்னூட்டக் கூடியது என்கின்றனர்.

ரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் UK அணுசக்தி ஆணையம் (UKAEA) இணைந்து முதல் கார்பன்-14 வைர பேட்டரியை உருவாக்கியிருக்கின்றனர்.

இது பல சூழல்களில் பயன்படக் கூடிய புரட்சிகர ஆற்றல் ஆதாரமாகத் திகழும் எனக் கூறியுள்ளனர். இது பல எரிபொருள் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்கின்றனர்.

பொதுவாக தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் பொருள்களின் காலகட்டத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் கார்பன் 14 என்ற தனிமத்தின் கதிரியக்க சிதைவுவைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்குகிறது.

Scientist Team

ஒரு சோலார் பேனல் ஒளியை மின்சாரமாக மாற்றுவதுபோல  கதிரியக்கச் சிதைவிலிருந்து வேகமாக நகரும் எலக்ட்ரான்களை இது மின்சாரமாகத் தருகிறது. இந்த கார்பன் 14 ஒரு வைர பெட்டகத்தில் வைக்கப்படுவதனால் அதிலிருந்து (diamond battery) வெளியேறும் எலக்ட்ரான் கசியாமல் இருக்கிறது.

கதிரியக்க கதிர்வீச்சை வைரம் உறிஞ்சிக்கொள்வதால் பாதுகாப்பான முறையில் குறைந்த அளவிலான மின்சாரம் நீண்டநாள்களுக்கு உருவாக்கப்படுகிறது.

கார்பன் 14 -ன் அரை ஆயுள்காலம் 5,700 ஆண்டுகள். இதனால் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இதிலிருந்து மின்சாரம் கிடைக்கும்.

diamond battery

வைர பேட்டரிகள் நிலையான மற்றும் பாதுகாப்பான மாற்று சக்தியாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை பல வழிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக மருத்துவத்துறையில் இவை பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நினைக்கின்றனர்.

உதாரணமாக, இதயத்தை சீராக துடிக்கச் செய்யும் Pacemaker, செவித்திறன் கருவி போன்ற கருவிகளில் அடிக்கடி பேட்டரி மாற்றுவது சவாலானது. ஆனால் இந்த வைர பேட்டரி நீண்ட நாள்கள் செயல்படும் என்பதனால் அந்த சிக்கலை நீக்குகிறது.

விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் போன்ற விண்வெளி திட்டங்களிலும், பூமியில் அடிக்கடி செல்ல முடியாத இடங்களிலும் இந்த பேட்டரியை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.