Pushpa 2: `புஷ்பா மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு

பிரமாண்டமான முறையில் இன்று வெளியாகியருக்கிறது `புஷ்பா 2 - தி ரூல்.

பொதுவாக ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுத்த பிறகு பல நடிகர்களும் அந்த வெற்றியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து பல திரைப்படங்களை படபடவென கமிட் செய்துவிடுவார்கள். ஆனால் `புஷ்பா திரைப்படத்தை முடித்தபிறகு பொறுமையாக பெரிய அளவிலான ஆர்பாட்டமில்லாமல் மூன்று வருடங்கள் வேறு எந்த திரைப்படத்தையும் கமிட் செய்யாமல் `புஷ்பா 2 திரைப்படத்திற்காக முழுமையாக தயாரானார் பன்னி! (பன்னி என்பது அல்லு அர்ஜூனின் செல்லப்பெயர்.)

அல்லு அர்ஜூன் மட்டுமல்ல மொத்த படக்குழுவும் இரண்டாம் பாகத்திற்கு அதிகப்படியான உழைப்பைச் செலுத்தியிருக்கிறது. பல சவால்களை மேற்கொண்டு சண்டைக் காட்சிகளை படக்குழு படமாக்கியிருக்கிறது. சில காட்சிகளை ஜப்பானுக்கு சென்றெல்லாம் படக்குழு ஷூட் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், நேரமும் பட்ஜெட்டும் ஒத்துழைக்காததால் அதைக் கைவிட்டுவிட்டு ஜப்பானின் நகரங்களை அப்படியே ஹைதராபாத்தில் செட் அமைத்து படம்பிடித்தார்கள். இசைப் பணிகளில் சில சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து பாடல்களை டி.எஸ்.பி இசையமைத்திருக்கிறார் எனவும், பின்னணி இசைப் பணிகளை இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் கவனித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

`புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்திற்காக தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு இசைக்கான தேசிய விருது கிடைத்தது.
Pushpa 2 poster

முதலில் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15-ம் வெளியாவதாக அறிவித்தனர். அதன் பிறகு ரிலீஸ் தாமதமானது. தாமதமானலும் ஒன்றுபட்ட உழைப்புடன் தற்போது ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது `புஷ்பா 2 . இதுவொரு தெலுங்கு திரைப்படம்தான். இருப்பினும் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் அதிக எண்ணிகையிலான திரையில் படம் வெளியாகிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் மட்டும் 800 திரைகளில் இப்படம் வெளியாகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய டிரெண்டும் இரண்டாம் பாகம் மீதிருக்கும் எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கியக் காரணம். பாடல்கள் தொடங்கி அல்லு அர்ஜூனின் பல பன்ச் வசனங்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதன் பிறகுதான் `இது பாகுந்தி நெக்ஸ்ட் பாகம் எப்புடு? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீட்டரையும் எகிர வைத்தது. அந்த எதிர்பார்ப்பு ரிலீஸுக்கு முன்பே பல லாபகரமான பிசினஸ்கள் திரைப்படத்திற்கு கிடைத்திருப்பதாக சினிமா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

சரி, ரிலீஸை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாகத்திற்கு ஒரு குட்டி ரீவைண்ட் அடிப்போமா.....

செம்மரக்கடத்தல் களம் தொடர்பாக முதலில் திரைப்படம் எடுக்க முடிவு செய்துவிட்டார் இயக்குநர் சுகுமார். அதன் பிறகு இந்தக் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவை நடிக்கவைக்கத் திட்டமிட்டார். ஆனால் அந்த முடிவு சரியாகக் கைகூடாததால் இந்தக் கதை அல்லு அர்ஜூனுக்கு சென்றது. இத்திரைப்படத்திற்கு முன்பே இயக்குநர் சுகுமாருக்கும் அல்லு அர்ஜூனுக்கும் இடையே நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. அதற்கு காரணகர்த்தா `ஆர்யா என்ற ஒரு திரைப்படம்தான். இயக்குநர் சுகுமாரின் முதல் திரைப்படம் இதுதான்.

Arya Movie

அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது திரைப்படம். அல்லு அர்ஜூன் அவருடைய முதலாவது திரைப்படத்தை முடித்த பிறகு வேறு எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தாராம். அந்த நேரத்தில்தான் அறிமுக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் `ஆர்யா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் நடித்தார். `ஆர்யா என்ற ஒரு திரைப்படம்தான். என்னுடைய கரியரையே முழுமையாக மாற்றிவிட்டது என பல மேடைகளிலும் அல்லு அர்ஜூன் சிலாகித்திருக்கிறார். `ஆர்யா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் தனுஷ் நடித்த `குட்டி திரைப்படம். இந்தப் படம் வெற்றிபெற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வெளியிட்டார்கள்.

இயக்குநர் சுகுமாருக்கும் அல்லு அர்ஜூன் அவ்வளவு ஃபேவரைட். மேடைகளிலும் `அல்லு அர்ஜூனின் வளர்ச்சியை உடனிருந்து பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் சிலாகித்துப் பேசியிருக்கிறார். `புஷ்பா 2 ஷூட்டிங் வேளையிலும் சுகுமாருக்கு அல்லு அர்ஜூனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டதால்தான் படப்பிடிப்பு தடைப்பட்டு நடக்கிறது. ஆனால், அதையெல்லாம் சுக்குநூறாக்கும் வகையில் இருவரும் கூடிய விரைவில் படத்தை முடித்து புரொமோஷன் நேரத்தில் பரஸ்பர அன்பைப் பகிர்ந்து கொண்டார்கள்.

Sukumar and Allu Arjun
`புஷ்பா 1 திரைப்படம் கொரோனா பெருந்தொற்று சூழலால் ரிலீஸில் தாமதமானது.

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்துக்கு வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக அப்போது பேசப்பட்டது. ஆனால், அந்த முடிவும் சரியாகக் கைகூடவில்லை. அதன் பிறகு வில்லன் கதாபாத்திரத்திற்கு ஃபகத் ஃபாசில் வந்தார். இதுதான் ஃபகத் பாசிலின் டோலிவுட் அறிமுகம். இதைத் தாண்டி, ரிலிஸுக்கு முன்பே வைரலான தேவி ஶ்ரீ பிரசாத்தின் பாடல்கள் படத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இரண்டாம் பாகத்தின் கதை என்ன?

கூலி வேலை செய்துக் கொண்டிருக்கும் புஷ்பராஜை செம்மரக்கட்டைகளின் கடத்தல் உலகம் ஈர்க்கிறது. அதன் பிறகு புஷ்பராஜின் வாழ்க்கையின் போக்கை தீமையின் பக்கம் கொண்டா ரெட்டியும், மங்கலம் ஶ்ரீனுவும் கொண்டு செல்கிறார்கள். இதனிடையில் புஷ்பராஜின் கரடுமுரடான வாழ்க்கையில் புஷ்பபாதை அமைக்க வருகை தருகிறார், ஶ்ரீ வள்ளி . ஒருகட்டத்தில் புஷ்பராஜ் வில்லன்களுக்கு எதிராக திரும்பி பகையை பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். இறுதியில் முக்கிய எதிரியாக வருகிறார் புதிதாக டிரான்ஸ்பராகி ஊருக்கு வரும் காவல் அதிகாரி பன்வார் சிங். பன்வார் சிங்கிற்கும் புஷ்பராஜுக்கும் இடையே உள்ள மோதல்தான் இந்த இரண்டாம் பாகம். அதுபோல சில மசாலா எலமென்ட்டுகளும், புஷ்பா னா பயர்னு நினைச்சியா... என்பது போன்ற பன்ச் வசனங்களும், டோலிவுட்டின் ஆஸ்தான ஸ்டன்ட் மற்றும் காதல் காட்சிகளும் ஆங்காங்கே அமைந்திருக்கிறதென ட்ரைலரில் தெரிய வருகிறது.

Pushparaj and Bhanwar Singh

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது. `புஷ்பா 1 திரைப்படம் டோலிவுட்டுக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால், இத்திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டுக்கு நடிகருக்கான முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தார் அல்லு அர்ஜூன். `` டோலிவுட்டு கிடைத்த நடிகருக்கான தேசிய விருது பட்டியலை பார்தேன். அதில் தெலுங்கு நடிகரின் பெயர் இல்லை. அந்த விஷயம் என்னை உறுத்தியது. ஸ்கெட்ச் போட்டு டோலிவுட்டுக்கு முதல் தேசிய விருதை தட்டி தூக்கினேன்! என பாலைய்யாவுடனான நேர்காணலில் அல்லு அர்ஜூன் பன்ச் பேசியிருந்தார்.

VIKATAN PLAY: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.