Aus vs Ind : கே.எல்.ராகுல்தான் ஓப்பனிங் இறங்குவார்! - ரகசியத்தை உடைத்த ரோஹித் சர்மா

பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அடிலெய்டில் நடக்கப்போகும் இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்திருந்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கே.எல்.ராகுல்தான் ஓப்பனிங் இறங்குவார் என்பதை உறுதி செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசுகையில், முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் ஆடிய விதத்தை வீட்டில் இருந்தபடியே சமீபத்தில் பிறந்த என்னுடைய குழந்தையுடன் கண்டுகளித்தேன். அற்புதமான இன்னிங்ஸ் அது. மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். வெளிநாடுகளில் கே.எல்.ராகுலின் பேட்டிங் மெச்சத்தகுந்த வகையில் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு எந்த மாற்றமும் தேவையில்லை என நினைக்கிறேன். அந்த ஓப்பனிங் ஸ்லாட்டுக்கு ராகுல் தகுதியானவரே.

கே.எல்.ராகுல் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அமைத்த பார்டன்ர்ஷிப்தான் எங்களுக்கு போட்டியையே வென்று கொடுத்தது. அதனால் ஓப்பனிங் விஷயத்தில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் இருவரும்தான் ஓப்பனிங் இறங்குவார்கள். வாஷிங்டன் சுந்தர் அணியின் மதிப்புமிக்க வீரர். காயங்கள் ஏற்பட்டு சறுக்கியதால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தார். காயங்களில் மட்டும் அவர் கவனமாக இருந்தால் மிகச்சிறந்த மேட்ச் வின்னராக சாதிப்பார். சில நேரங்களில் சூழலைப் பொறுத்து கடினமான முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அஷ்வின், ஜடேஜா போன்ற மேட்ச் வின்னர்களை சூழலைப் பொறுத்துதான் பென்ச்சில் வைத்திருக்கும் முடிவு எடுக்கப்படுகிறது. அதற்காக அவர்களின் காலம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.

Ashwin

அணிக்கு தேவைப்படும்பட்சத்தில் அவர்களால் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பெர்பார்மென்ஸை கொடுக்க முடியும். ஜெய்ஸ்வால், பண்ட், கில் எல்லாம் புதிய தலைமுறை வீரர்கள். நாங்கள் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது எப்படி ரன்களை சேர்க்கப்போகிறோம் என்பதில்தான் கவனம் இருந்தது. ஆனால், இவர்களுக்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பதில்தான் முழுக்கவனமும் இருக்கிறது. என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.