Lakshmi: மிஸ் யூ சஞ்சீவ்.. - லட்சுமி தொடரிலிருந்து வெளியேறிய சஞ்சீவ்; அவருக்குப் பதிலாக யார்?

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `லட்சுமி. இந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் சஞ்சீவ். ஸ்ருதி ராஜ் இந்தத் தொடரின் கதாநாயகி. `வானத்தைப் போல தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் அந்தத் தொடருக்குப் பிறகு, இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.

சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ்

இந்நிலையில் தற்போது சஞ்சீவ் இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். எதனால் அவர் இந்தத் தொடரை விட்டு விலகினார் என்பது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

சன் டிவியில் `மகராசி தொடரில் நடித்திருந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆர்யன்தான், சஞ்சீவிற்குப் பதிலாக லட்சுமி தொடரில் செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் எஸ்.எஸ்.ஆர். ஆர்யனுக்கும், நடிகை ஸ்ருத்திகாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் மகராசி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். 

எஸ்.எஸ்.ஆர். ஆர்யன்

சஞ்சீவ் ரசிகர்கள் பலர் `மிஸ் யூ சஞ்சீவ் எனச் சமூகவலைத்தளப் பக்கங்களில் கமென்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் `வெல்கம் பேக் ஆர்யன் என அவருடைய ரசிகர்கள் ஆர்யனுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.