Bihar: முட்டை விற்பவரின் மகன் டு நீதிபதி - கல்வியால் சாதித்த பீகார் இளைஞர்!

பீகாரில் முட்டை விற்பவரின் மகன் ஒருவர் நீதித்துறை சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியிருக்கிறார்.

அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷிவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார் என்ற இந்த இளைஞர், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (BPSC) 32-வது நீதித்துறை சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகியிருக்கிறார். இவரின் தந்தை விஜய் சா, ஷிவ்கஞ்ச் மார்க்கெட்டில் வண்டியில் முட்டை விற்று குடும்பத்தையும், ஆதர்ஷ் குமாரின் படிப்புச் செலவையும் கவனித்து வந்தார்.

நீதிபதிகள்

இவருக்கு உறுதுணையாக மனைவி சுனயனாவும், குடும்பத்தின் நிதிச் சிக்கல்கள் மகன் ஆதர்ஷின் கல்வியைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக, சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி படிக்க வைத்தார். மறுபக்கம், தனது பெற்றோரின் கடின உழைப்பைப் பார்த்துப் படிப்பில் தீவிர கவனம் செலுத்திய ஆதர்ஷ் குமார், பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு பி.ஏ எல்.எல்.பி பட்டப்படிப்பை முடித்தார்.

ஆதர்ஷ்

அதைத்தொடர்ந்து, பெரிய கோச்சிங் சென்டர்களில் படிக்க முடியாத சூழலில், யூடியூபில் நீதித்துறை தேர்வு தொடர்பான பாடங்களை வீட்டிலிருந்தபடியே படித்து வந்தார். இந்நிலையில், BPSC நீதித்துறை சேவை தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். பின்னர், இந்த வெற்றியைத் தனது பெற்றோருக்குச் சமர்ப்பித்த ஆதர்ஷ், ``என்னுடைய அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் கடின உழைப்பே என்னைப் படிக்கத் தூண்டியது." என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.