சத்தமில்லாமல் உதவி செய்த விஜய்!.. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது தளபதி?..

தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மாநாட்டின் போது உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் உதவி செய்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் முதலிடத்தில் இருப்பது நடிகர் விஜய். தற்போது சினிமா பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கின்றார். அந்த வகையில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  சமந்தாவின் தந்தை திடீர் மரணம்!.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!…

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பின்னர் தேர்தல் ஆணையத்தில் கட்சியினை பதிவு செய்து கொடி, பாடல் என அனைத்தையுமே வெளியிட்டார். அடுத்தடுத்த நிகழ்வாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் முதல் மாநாட்டை நடத்தி முடித்து இருந்தார்.

இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து பங்கேற்று இருந்தார்கள். இந்த மாநாட்டில் தனது கொள்கையை அறிவித்த விஜய் தங்களின் அரசியல் எதிரி யார்? என்று அறிவித்திருந்தார். மாநாடும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் படையெடுத்தார்கள்.

tvk vijay

tvk vijay

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். அதன்படி திருச்சியில் இருந்து காரில் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டிக்கு வருகை தந்த ஸ்ரீனிவாசன் மற்றும் கலைக்கோவன் ஆகியோர் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இரண்டு இளைஞர்கள் சென்னை தேனாம்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் உயர்ந்தார்கள்.

அடுத்ததாக சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாடு திடலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இப்படி தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க வந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தவுடன் எந்த ஒரு நிதி உதவி செய்யவில்லை என்பது சமூக வலைதள பக்கங்களில் பெரும் பேசு பொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கியிருக்கின்றார். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து தனிப்பட்ட முறையில் நிதி உதவி செய்திருக்கின்றார்.

இதையும் படிங்க:  சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..

ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் சூழல் கருதி தனித்தனியாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு உயிரின் மதிப்பு என்பது விலைமதிப்பற்றது. அப்படி இருக்கையில் ஒவ்வொருவரின் குடும்ப சூழல் கருதி தனித்தனியாக தொகையை நிர்ணயிப்பது தவறான செயல். அதிலும் சென்னையில் இருந்து சென்று உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

இந்த தொகையே மிகவும் குறைவு என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது. நடிகர் விஜய் தற்போது நிறைவாக கொடுக்கும் போது தான் நாளை அது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து ஓட்டாக மாறும். நடிகர் விஜய்க்கு இந்த தொகை எல்லாம் மிகப்பெரிய விஷயம் கிடையாது. அப்படி இருக்கும் சமயத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தால் மக்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து இருக்கும் என்பது விமர்சனகளின் கருத்தாக இருக்கின்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.