2025 லவ்வர்ஸ் டே-வுக்கு ரிலீஸாகும் புதிய படங்களின் லிஸ்ட்!.. கவினின் படம் மட்டும் டவுட்!…

NEEK Movie: தமிழ் சினிமாவை பொறுத்தவரை தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, கோடை விடுமுறை போலவே காதலர் தினத்தை குறி வைத்து புதிய படங்கள் வெளியாகும். குறிப்பாக காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை உருவாக்கி காதலர் தினத்தன்று வெளியிட்டு கல்லா கட்டுவார்கள்.

80களில் நிறைய காதல் படங்களே உருவானது. எல்லா நடிகர்களும் கதாநாயகியை உருகி உருகி காதல் செய்வார்கள். காதலில் பிரிவு, சோகம் எல்லாமே காட்டப்படும். பெரும்பாலும் காதலர்கள் ஒன்று சேராமல் பிரிவது போல காட்டி சோகத்தை பிழிவார்கள். நடிகர் முரளி வந்த பின் இதயம் போன்ற படங்கள் வெளிவந்தது.

இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.

படம் முழுக்க நேசிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் ஹீரோ தவிப்பார். படத்தின் இறுதியில்தான் அது கதாநாயகிக்கே தெரியவரும். இது போன்ற ஒரு டஜன் கதைகளில் முரளி நடித்திருப்பார். ஒருபக்கம், ஆக்‌ஷன் படங்களும் வெளியாகி கல்லா கட்டும். காதல், ஆக்‌ஷன் இது இரண்டுதான் படத்தை வெற்றி அடைய வைக்கும் 2 வழிகள் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணம்.

இப்போதெல்லாம் நிறைய ஆக்சன் படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில்தான் 2025 பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்தன்று என்னென்ன படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். இதில், அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தனுஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

kiss

#image_title

மேலும், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அடுத்து ஆர்யா – கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படமும் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

அதேபோல், கவினின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிஸ்’ படமும் காதலர் தினத்தை குறிவைத்திருக்கிறது. இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டிருப்பதால் ரிலீஸ் தள்ளி போகவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: வானிலை நிலவரம் மாதிரி இருக்கே அஜித் படத்தோட நிலைமை!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.