குட்டி குரங்கு - சிறார் சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
பசுமை நிறைந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் அரசூர். அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் மதியும், மாயாவும் 5-ம் வகுப்பு படிக்கிறார்கள். பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அப்போது ஒரு பெரிய மதில் சுவர் கட்டப்பட்டிருந்த இடத்தின் அருகே இருவரும் நடக்கையில், மாயா, "இந்த பெரிய சுவற்றுக்கு அந்த பக்கம் உள்ள இடத்தில அழகான தோட்டம் இருக்காம். நிறைய பூச்செடிகளும், மாம்பழ மரங்களும் இருக்காம், நாம்ப உள்ள போய் பார்ப்போமா" என்று கேட்டாள்.
"வேணாம் மாயா, யாரும் உள்ள வரக்கூடாதுன்னு தான் இவ்ளோ பெரிய சுவர் கட்டியிருக்காங்க, இத மீறி நாம்ப உள்ள போகலாம, நீயே சொல்லு" என்று மதி கேட்டாள். அதை கேட்ட மாயா, "மதி உள்ள மல்லிகை பூச்செடியும் இருக்கும். பூத்திருக்கும் மல்லிகை பூக்களை பறிச்சிட்டு வரலாம்" என்று கூறினாள்.
"இல்ல மாயா, நான் எங்க அம்மாகிட்ட கேட்டாலே எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவாங்க, நா உள்ள வரல நீ வேணா உள்ள போ" என்று கூறிவிட்டு மதி வீட்டிற்கு நடந்தாள். பின் மாயாவும் அங்கிருந்து வீட்டிற்கு சென்றாள்.
மலைகளின் மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள மரங்களில் பல குரங்குகள் வசித்து வந்ததன. அதில் ஒரு குரங்கு தான் பெற்றெடுத்த குட்டி குரங்குக்கு தாவும் பயிற்சியை கற்றுக் கொடுத்தது.
பயிற்சி முடிந்த பின், தாய் குரங்கு "நம் இருவருக்கும் சாப்பிட நான் உணவு கொண்டு வர வெளியே செல்கிறேன். நீ நம் இடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது" என்று குட்டி குரங்கிடம் கூறிவிட்டு சென்றது.
தனிமையில் அமர்ந்திருந்த குட்டி குரங்கின் அருகில் வந்து அமர்ந்து பேச்சு கொடுத்த காகம், "நண்பா அரசூர் கிராமத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. அங்கு நிறைய வாழைமரங்களில் பழங்கள் பழுத்த நிலையில் இருக்கின்றன. நீ என்னுடன் வா, நாம் சாப்பிடலாம்" என்று கூறியது. அதைக் கேட்ட குட்டி குரங்கு "என்னுடைய அம்மா உணவு கொண்டு வரத்தான் சென்றிருக்கிறார். நான் வரவில்லை" என்று கூறியது.
அதை கேட்ட காகம், "நண்பா, இப்போது நீ வளர்ந்து விட்டாய், தாவவும் கற்றுக்கொண்டாய், பிறகு ஏன் காத்திருக்கிறாய், பயப்படாமல் என்னோடு வா" என்று கூறியது, இதை கேட்டதும் குட்டி குரங்கு அரசூர் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றது. காகம் பறந்து சென்று மதில் சுவரை தாண்டியது. குட்டி குரங்கு சுவரின் அருகில் இருந்த மரத்தில் ஏறி சுவரை தாவி குதித்து தோட்டத்திற்குள் சென்றது. அங்கு நிறைய பூச்செடிகளும், பழமரங்களும் இருப்பதை குட்டி குரங்கு பார்த்தது.
"நண்பா, முதலில் எனக்கு அந்த மாமரத்தில் உள்ள பழங்களை பறித்துக்கொடு" என்று உரிமையாய் காகம் கேட்டது. குட்டி குரங்கும் உடனே மாமரத்தில் ஏறி, பழங்களை பறிக்க முயற்சித்தது.
அப்போது அந்த தோட்டத்தை பாதுகாக்கும் தோட்டக்காரன் வந்ததும், காகம் அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் குரங்கு அந்த தோட்டக்காரனிடம் வசமாய் மாட்டிக்கொண்டது. குட்டி குரங்கின் வாளை கயிற்றால் சுருக்குபோட்டு மரத்தில் கட்டிப்போட்டான்.
குட்டி குரங்கால் எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை. ஒழுங்காக தன் தாய் கூறியதை கேட்டு நடந்திருந்தால் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்க மாட்டோம் என்று தன் தவறை எண்ணி மனம் வருந்தியது.
தன் வசிப்பிடத்தில் குட்டி குரங்கு இல்லாததால், ஒவ்வொரு இடமும் சென்று தேடிய தாய் குரங்கு, அரசூர் கிராம தோட்டத்திற்குள் சிக்கி இருக்கும் குட்டி குரங்கை கண்டுபிடித்துவிட்டது.
இரவு வந்ததும், தாய் குரங்கு அந்த தோட்டத்தின் மதில் சுவரை தாவி குதித்து, உள்ளே மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த குட்டி குரங்கை அவிழ்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வனத்திற்குள் உள்ள வசிப்பிடத்திற்கு அழைத்து வந்தது. தன் தவறை எண்ணி தாய் குரங்கிடம் மன்னிப்பு கேட்டது குட்டி குரங்கு. அன்றில் இருந்து காகத்தின் நட்பை முடித்து கொண்டதுடன், தாயின் பேச்சை மீறுவதே இல்லை குட்டி குரங்கு!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.