Akhil Akkineni: அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் திருமணம்; மகனின் நிச்சயதார்த்தத்தை அறிவித்த நாகர்ஜுனா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவுக்கும், தமிழில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. வரும் டிசம்பரில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.

அகில் அக்கினேனி - ஜைனப் ராவ்ட்ஜி

அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க்கின்றன. இந்த வேளையில், நாகர்ஜுனாவின் இளைய மகனும், நாக சைதன்யாவின் சகோதரருமான நடிகர் அகில் அக்கினேனிக்கும், Lifestyle Blogger ஜைனப் ராவ்ட்ஜிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதை நாகர்ஜுனா அறிவித்திருக்கிறார்.

We are thrilled to announce the engagement of our son, @AkhilAkkineni8, to our daughter in law to be Zainab Ravdjee!

We couldnt be happier to welcome Zainab into our family. Please join us to congratulate the young couple and wish them a lifetime filled with love, joy, and… pic.twitter.com/5KM7BU00bz

— Nagarjuna Akkineni (@iamnagarjuna) November 26, 2024

அகில் அக்கினேனி - ஜைனப் ராவ்ஜி நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜூனா எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ``எங்கள் மகன் அகில் அக்கினேனி மற்றும் எங்கள் மருமகள் ஜைனப் ராவ்ட்ஜியின் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஜைனப்பை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதை விட மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது. எனவே, இந்த இளம் ஜோடியை எங்களுடன் சேர்ந்து, அன்பும், மகிழ்ச்சியும், உங்களின் எண்ணற்ற ஆசிகளும் நிறைந்த வாழ்க்கைக்கு வாழ்த்துங்கள்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Akhil Akkineni (@akkineniakhil)

அதேபோல், அகில் அக்கினேனியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``எந்தன் என்றென்றைக்குமானவரை கண்டுகொண்டேன். ஜைனப் ராவ்ட்ஜியும் நானும் மகிழ்ச்சியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என்று குறிப்பிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.