Career: இளங்கலை படித்தவர்களுக்கு வங்கியில் மேனேஜர் பணி; ஆண்டுக்கு ரூ.6 லட்ச சம்பளம்

ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு காலி பணியிடங்கள்.

என்ன பணி?

பொது மற்றும் அக்ரி அசெட் ஆபீசர் பிரிவில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி.

மொத்த காலி பணியிடங்கள்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொது பிரிவில் 50 காலி பணியிடங்கள்; அக்ரி அசெட் அபீசர் பிரிவில் மொத்தமாக 100 காலி பணியிடங்கள்.

வயது வரம்பு: 20 - 25 (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: பொது பிரிவில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு எதாவது ஒரு இளங்கலை பட்டம்.

அக்ரி அசெட் ஆபீசர் பிரிவில் எதாவது விவசாயத் துறையில் ஒரு இளங்கலை அல்லது இன்ஜினீயர் பட்டம்.

கல்வித் தகுதி

குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் - ரூ.6.50 லட்சம்.

எப்படி தேர்வு செய்வார்கள்?

ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2024.

(ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://ibpsonline.ibps.in/

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.