UP: பண மாலையைப் பறித்துச் சென்ற டெம்போ டிரைவர்... சேஸ் செய்து மீட்ட மணமகன்! | Viral Video
உத்தரப்பிரதேசத்தில் மணக் கோலத்தில் ஒருவர் பைபாஸில் பைக்கிலிருந்து, ஓடும் மினி டெம்போவுக்குத் தாவி சேஸிங்கில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி மீரட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில், கோட் சூட்டுடன் மணக் கோலத்திலிருந்த அந்த நபர், தனது திருமணத்தை முன்னிட்டு பாரம்பர்ய முறைப்படி குதிரையில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மினி டெம்போவில் சென்ற அதன் டிரைவர், மாப்பிள்ளையின் பண மாலையைப் பறித்துச் சென்றார்.
அதனால், அதிர்ச்சியடைந்த மணமகன் உடனடியாக அங்கிருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி பைபாஸில் டெம்போவை துரத்திச் சென்றார். சேஸிங்கில் டெம்போவை நிறுத்துமாறு மணமகன் கூறியபோதும் டெம்போவின் டிரைவர் நிற்காமல் சென்றார். அதனால், மணமகன் பைக்கிலிருந்து டெம்போவுக்குத் தாவி, பண மாலையை மீட்டார். பின்னர், மணமகனின் உறவினர்கள் வந்து அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கினர்.
Video of the year!
— Piyush Rai (@Benarasiyaa) November 25, 2024
In UPs Meerut, groom Dev Kumar was happily getting home after the wedding when a pick up driver pinched a note from his currency tucked garland. What followed was a near Bollywood, daring chase for justice! Groom Dev Kumar asked for lift from a motorist,… pic.twitter.com/libIH8PRTT
அப்போது, அந்தப் பணமாலையைப் பறிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தவறுதலாக வந்துவிட்டதாகவும் டெம்போ டிரைவர் விளக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸுக்கு யாரும் புகாரளிக்காத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

