Good Bad Ugly: `இன்னும் 7 நாள்கள்தான்... - தயாரிப்பாளர் கொடுத்த ̀குட் பேட் அக்லி அப்டேட்
̀புஷ்பா 2 திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிற நிலையில் படக்குழு இன்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் நெல்சன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் நெல்சன் பேசுகையில், ``புஷ்பா படத்தோத முதல் பாகம் பார்த்ததும் எனக்கு பிடிச்சிடுச்சு. படம் பயங்கரமாக இருந்தது. அதன் பிறகு அல்லு அர்ஜூன் சாரை சந்தித்துப் பேசும்போது புஷ்பா பற்றிக் கேட்பேன். அவரை மாதிரி யாராலும் நடனமாட முடியாது. புஷ்பா 2 திரைப்படத்திற்கு ரொம்பவே எதிர்பார்ப்போட இருக்கேன். ̀̀̀̀̀ இந்தப் படத்தோட தயாரிப்பாளர்களை நான் பார்க்கும்போதெல்லாம் புஷ்பா 2 பத்திதான் கேட்பேன். புஷ்பா படத்தோட முதல் பாகம் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜூன் சார் படமே பண்ணல.
இயக்குநர் சுகுமார் சார்கிட்டையும் நான் இதுபத்திதான் கேட்டேன். ஒரு படத்தோட ஹிட்டுக்குப் பிறகு பலரும் அடுத்தடுத்து பெரிய படங்கள் பண்ணுவாங்க. ஆனால், இவங்க இந்தப் படத்துக்காக முழுமையாகத் தயாராகியிருக்காங்க. நான் அவர்கூட படம் பண்றது பற்றி அல்லு அர்ஜூன் சார்தான் சொல்லணும். அவர் நேரடி தமிழ் படம் பண்ணனும்ங்கிறதுதான் என்னுடைய ஆசை. எனப் பேசினார்.
இந்த நிகழ்வில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் நவீன், ̀̀அஜித் படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவிருக்கிறது. இன்னும் 7 நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யதிட்டமிடுகிறோம். கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம். எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், ̀̀ புஷ்பா 1 படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததுக்கு நன்றி. இத்திரைப்படம் எனக்கும் அல்லு அர்ஜூனுக்கும் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. ̀ஊ சொல்றியா பாடல் வெளியான சமயத்துல இது தேசிய கீதமாக ஒலிக்கும்னு தாணு சார் சொன்னார். உலகம் முழுவதும் அந்த பாடல் ஒலிச்சது." எனக் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

