Ajith: நவ. 24இல் முடியும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு; அஜித்தின் அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தது ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
திரைப்படங்கள் தவிர்த்து, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கூட அவர் கார் பந்தயத்தில் விரைவில் கலந்துகொள்ள இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் நவம்பர் 27ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியைத் தொடங்க இருக்கிறது என்று அஜித்தின் venus motorcycle tours நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
View this post on InstagramA post shared by Venus Motorcycle Tours (@venusmotorcycletours)
இதுதொடர்பாக venus motorcycle tours வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "பல்கேரியாவில் நடக்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் தனது காட்சிகளை நவம்பர் 24ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறார் அஜித். அதன் பிறகு மீண்டும் ரேஸிங்கிற்கு திரும்புகிறார். நவம்பர் 27 ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியைத் தொடங்கும்" என்று தெரிவித்திருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/PesalamVaanga

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


