``வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை - விமர்சனங்களுக்கு மோகினி டே பதில்
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தியாக வெளியானது அவரின் மனைவியின் விவாகரத்து அறிவிப்பு. இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் குறித்து சில தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டது.
இது தொடர்பாக , ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், ``என் தந்தை அவரின் வியக்கத்தகு திறமைக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை, பிறர் மீதான அன்பிற்காகவும் புகழப்படும் ஒரு லெஜெண்ட். ஆனால், அவர் குறித்து தவறான, ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து விமர்சிக்கும்போது, நாம் அனைவரும் அவர்களின் தனியுரிமை, அந்த விமர்சனத்தின் உண்மைதன்மை, விமர்சனத்துகுரியவரின் மரியாதை ஆகியவற்றையும் நினைவில் கொள்வோம். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மோகினி டே பதில்..
இந்த நிலையில், மோகினி டே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தபோது, பல நேர்காணல்களுக்கு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அவைகளை மரியாதையுடன் நிராகரிக்க விரும்புகிறேன். இந்த வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. எனது ஆற்றல், வதந்திகளுக்கு பதில் கூறி செலவழிக்கத் தகுதியற்றது என்றே நம்புகிறேன். தயவுசெய்து எனது தனியுரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


