Live Aus vs Ind: மீண்டும் ஏமாற்றிய கோலி... 2 பேர் டக் அவுட்; 3 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்!
மீண்டும் ஏமாற்றிய கோலி... 2 பேர் டக் அவுட்; 3 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்!
டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வாலும், கே.எல். ராகுலும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த கிரவுண்டில், மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சியைத் தந்தார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து ஜெய்ஸ்வாலின் பெட்டில் எட்ஜ் வாங்கி நாதன் மெக்ஸ்வீனி கைகளில் தஞ்சமடைந்தது. ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் ரன் கணக்கைத் தொடங்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், பந்தைச் சரியாக பேட்டில் எதிர்கொள்ளவே சற்று தடுமாறினார்.
22 பந்துகளாக ரன் ஏதும் அடிக்காமல் களத்தில் நின்றுகொண்டிருந்த படிக்கல், 23-வது பந்தில் ஜெய்ஸ்வாலைப் போலவே எட்ஜ் வாங்கி ஹேசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 15 ஓவர்கள் முடிவில், இந்தியா இரண்டு விக்கெட் இழப்பு 21 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 52 பந்துகளில் 14 ரன்களுடனும், விராட் கோலி 8 பந்துகளில் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இரண்டு அனுபவ வீரர்கள் இந்திய அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், விராட் கோலியை 5 ரன்களில் காலி செய்தார் ஹேசில்வுட். 12 பந்துகளில் 5 ரன்கள் அடித்த விராட் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றமளித்து பெவிலியன் பக்கம் சென்றார். தற்போது, கே.எல்.ராகுலுடன் ரிஷப் பண்ட் கைகோர்த்திருக்கிறார்.
பும்ரா:
2018-ல் நாங்கள் இங்கு ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடினோம். அதனால், எங்களுக்கு என்ன தேவை என்பது எங்களுக்குத் தெரியும். களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமா இருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். பந்துவீச்சில், நாங்கள் 4 வேகப்பந்துவீச்சளர்கள் மற்றும் ஒரேயொரு ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்குகிறோம்.
பேட் கம்மின்ஸ்:
வெற்றிவாய்ப்பில் இருவரும் சம அளவில் இருக்கிறோம். எப்படியிருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடும் எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் அது கடும் போட்டியாகத் தெரிகிறது. எங்கள் அணியில் டாப் ஆர்டரில், நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமாகிறார்.
அணிகளின் விபரம்:
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:
இந்திய அணியில் புதிய வேகப்பந்துவீச்சாளர் அறிமுகம்!
இந்தியா பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடத்தில் இளம் வீரர் அறிமுகம்!
ஆஸ்திரேலியா பிளெயிங் 11:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்
டாஸ் வென்ற இந்திய அணி
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதலாவது போட்டியில் டாஸ் வந்த இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி சார்பில் நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளனர். இந்த போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார்.அஸ்வின் இடம்பெறவில்லை.

பார்டர்- கவாஸ்கர் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று, அதாவது நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் , சர்ஃபராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
பேட் கம்மின்ஸ் , ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
கேப்டன்கள்
ரோஹித் சர்மா இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால் ரோஹித்திற்கு குழந்தை பிறந்திருப்பதால் முதல் போட்டியில் மட்டும் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில் முதல் போட்டியில் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார்.
இந்திய அணிக்கு இருக்கும் சவால்:
இந்திய அணி சுமார் 2 மாத காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு வேளை தொடரை இழந்தாலோ மிக குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
எதில் பார்க்கலாம்?
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பார்டர்- கவாஸ்கர் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். அதேபோல டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளை பார்க்கலாம்.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றிருப்பதால் இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


