ஓசூர்: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; குமாஸ்தா கைது; பின்னணி என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (நவம்பர் 20) பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் அருவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கண்ணன். வழக்கறிஞரான இவர் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியர் வழக்கறிஞராகக் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஓசூர் நீதிமன்றத்திற்கு வழக்கம் போலப் பணிக்கு வந்தார். மதியம் ஒரு மணி அளவில் நீதிமன்றத்திலிருந்து வெளியே நடந்து வந்த கண்ணனை, பின்தொடர்ந்து வந்த ஆனந்தகுமார் என்பவர் தனது கையில் வைத்திருந்த அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், நிலைதடுமாறிய கண்ணன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். பின்னர், சக வழக்கறிஞர்கள் சேர்ந்து கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “வழக்கறிஞர் கண்ணனுக்கும், ஆனந்த குமாருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வந்துள்ளது. ஆனந்தகுமாரும் குமாஸ்தாவாகப் பணியாற்றி வருகிறார்.
ஆனந்த குமாரின் மனைவி வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரும் கண்ணன் பணியாற்றி வருகிற மூத்த வழக்கறிஞரிடம் தான் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கண்ணனுக்கும், ஆனந்த குமாரின் மனைவிக்கும் சமீபகாலமாகப் பழக்கம் இருந்து வருகிறது. இது ஒருகட்டத்தில் இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசிக்கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது. இதுகுறித்து ஆனந்தகுமார் தனது மனைவியைக் கண்டித்ததுடன், கண்ணனையும் கண்டித்துள்ளார்.

இதனால் சமீபகாலமாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முதல் நாள் இந்த பிரச்னையானது இருவரும் வேலை பார்க்கும் அலுவலகத்தின் சீனியர் வழக்கறிஞர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஆனந்தகுமாரும் விசாரணைக்கு வந்துள்ளார். அதில், இருவரையும் சமரசம் செய்து, இனி இதுபோல் பிரச்னை நிகழாமல் இருக்கப் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தான் மீண்டும் வழக்கறிஞர் கண்ணன், ஆனந்தகுமாரின் மனைவிக்கு அன்று இரவே மெசேஜ் செய்துள்ளார். இதன்மூலம் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது. நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இதுகுறித்து ஓசூர் காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “இருவருக்கும் ஏற்கனவே பிரச்னை இருப்பது உண்மைதான். அதன் மூலம் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான ஆனந்தகுமார் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/JailMathilThigil

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

