Mufasa: ஷாருக் கான், மகேஷ் பாபு வரிசையில்... - முஃபாசாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் தமிழ் நடிகர் ?
`முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த லயன் கிங் திரைப்பட ஃபிரான்சைஸ் தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். சிம்பா, டிமன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் கார்டூன் வடிவிலிருந்து பலரும் ரசித்து வருகிறார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வடிவில் 2019-ம் ஆண்டு `தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ் மக்களுக்கு அதிகளவில் பரிச்சயமான நடிகர்களின் நகைச்சுவை தொனி கொண்ட குரல்தான் தமிழகத்தில் இப்படத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது. இந்தக் குரல்கள் அதன் இரண்டாம் பாகத்திற்குக் கொஞ்சம் `மவுசு கிடைக்கச் செய்திருக்கிறது. `தி லயன் கிங் படத்தின் அடுத்த பாகமான `முஃபாசா - தி லயன் கிங் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருப்பதையொட்டி தமிழ் டிரெயிலரை வெளியிட்டிருக்கிறது, வால்ட் டிஸ்னி.
இந்த பாகத்தில் முஃபாசாவுக்கு அர்ஜூன் தாஸ் குரல் கொடுத்திருக்கிறார். `தி லயன் கிங் திரைப்படத்தில் முஃபாசாவுக்கு நடிகர் ரவி ஷங்கர் குரல் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி ஸ்காருக்கு அசோக் செல்வனும், கிராஸுக்கு நாசரும், ரஃபிகி (இளமை) கதாபாத்திரத்திற்கு வி.டி.வி. கணேஷும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தாண்டி வழக்கம்போல பலருக்கும் பிடித்தமான அதே டிமன் மற்றும் பூம்பா கதாபாத்திரத்திற்கு சிங்கம் புலியும், ரோபோ ஷங்கரும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தி பதிப்பிற்கு முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஷாருக்கானும், தெலுங்கு பதிப்பிற்கு மகேஷ் பாபுவும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

