Career: BE/BTech தேர்ச்சி, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு BEL நிறுவனத்தில் பணி; முழு விவரம்!

மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) புராஜெக்ட் இன்ஜினீயர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்கள்:

I). பணியின் பெயர்: Sr.Field Operation Engineer (IT Security&Asset Manager)

காலியிடங்கள்: 8,

சம்பளம்: ரூ.80,000,

வயது: 45-க்குள் இருக்க வேண்டும்,

கல்வித்தகுதி: IT/CS/ECE/Electronics/E&TC 9 B.E./B.Tech. தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450.

பணி விவரங்கள்

II). பணியின் பெயர்: Field Operation Engineer.

a) பிரிவு: DC Support

காலியிடங்கள்: 4.

b) : IT Support Staff

காலியிடங்கள்: 37,

சம்பளம்: ரூ.60,000,

வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: IT/CS/ECE/Electronics/E&TC/Mech/EEE பிரிவில் B.E/B.Tech. தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450

Bharat Electronics Limited

III). பணியின் பெயர்: Project Engineer-I

 a) Content writer

காலியிடம்: 1.

b) IT Help Desk Staff

காலியிடங்கள்: 12

சம்பளம்: ரூ.40,000

வயது: 32-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: IT/CS/ECE/ Electronics/E&TC/Mech/EEE பிரிவில் B.E. /B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400

IV). பணியின்பெயர் : Trainee Engineer-I (District Technical Support)

காலியிடங்கள்: 18

சம்பளம்: ரூ.30,000

வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: IT/CS/Electronics/ECE/ETC பிரிவில் B.E./ B.Tech. தேர்ச்சியுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ. 150.

வயது உச்ச வரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள் சலுகை உண்டு.  

விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் SBI வங்கியில் செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

http://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 24.11.2024

மேலும் முழுவிவரங்களுக்கு Bharat Electronics Limited - Notification No:383/HR/HLS&SCB 2024-25 இந்த லிங்கை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.