Basics of Share Market 32: பங்குச்சந்தையில் `இது ஆபத்து; `இதை பண்ணாதீங்க!

களத்தில் இறங்குவது என முடிவு செய்துவிட்டோம் என்று கையில் இருக்கும் அத்தனை காசையும் பங்குச்சந்தையில் கொட்டிவிடக்கூடாது. என்ன தான் பங்குச்சந்தையில் லாபங்கள் குவிந்தாலும், அதில் ரிஸ்க் அதிகம் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது.

மேலும், இவர்கள் சொல்கிறார்கள்... அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒரு பங்கில் முதலீடு செய்யாமல், முதலீடு செய்வதற்கு முன்பு, நீங்கள் ஒரு முறை செக் செய்து பார்ப்பது நல்லது. முதன் முதலாக, தானாக முதலீடு செய்யத் தொடங்கும்போது அதிக காசைப் போட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அறிவுரை கேட்கிறீர்கள் என்றால்...

ஆரம்பத்தில், குறைந்த தொகையை போட்டுப் பாருங்கள். பங்குச்சந்தை என்றால் என்ன? என்பது பிடிப்படும் வரை அதே அளவான தொகை அல்லது கொஞ்சம்கூட, குறைச்சலாக மட்டும் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை சம்பந்தமாக யாரிடமாவது அறிவுரை கேட்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு பங்குச்சந்தை பற்றி நன்கு தெரியுமா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பின்பு, அவர்களுடைய அறிவுரையைக் கேளுங்கள்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் உங்கள் முதலீட்டின் போக்கைக் கவனியுங்கள். தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தால், அதற்குக் காரணம் என்ன... இனி வளர்ச்சி பாதையில் செல்லுமா என்பதை செக் செய்து முதலீட்டை மாற்றி அமையுங்கள்.

முதலீடு செய்யும்போது இந்த லாபம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு தொகையை ஃபிக்ஸ் செய்துகொள்ளுங்கள். உங்கள் முதலீடு அந்தத் தொகையை அடைந்த உடன் முதலீட்டுத் தொகையை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் வேண்டும் என்று பேராசைப்பட்டு இருக்கும் தொகையையும் இழந்துவிடாதீர்கள். காரணம், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் கணிக்கப்பட முடியாதது ஆகும்.

நாளை: எங்கும் ஸ்கேம்...எதிலும் ஸ்கேம்...இங்கேயும் ஸ்கேம் - பங்குச்சந்தை ஸ்கேம்கள் உஷார்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.