சந்தானம் Meme வச்சு என்னை ட்ரோல் பண்ணாங்க- நயன்தாரா உடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன்

நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் பற்றிய Nayanthara: Beyond the Fairytale என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது.

அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன் என்பது குறித்தும், காதல் வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்தும் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதேபோல விக்னேஷ் சிவனும் இந்த ஆவணப்படத்தில் சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். குறிப்பாக இருவருக்கும் இடையேயான காதல் குறித்து பேசிய விக்னேஷ் சிவன், "எங்களுடைய காதல் முதன்முதலாக பொதுவெளியில் தெரியவந்தப்போது, என்னை கடுமையாக ட்ரோல் செய்தார்கள்.

Nayanthara - Vignesh Shivan

நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கனுன்னு இருந்தா யாராலும் தடுக்க முடியாது என்ற சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளை பதிவிட்டு, தன்னை ட்ரோல் செய்தார்கள். ஆனால், வாழ்க்கை அப்படியானதுதான். நடத்துநராக இருந்தவர் சூப்பர்ஸ்டாராக மாறவில்லையா? அதுபோல் தான் வாழ்க்கையும் என அவர் பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.